இந்திய அரசியல் கட்சிகள்
இந்தியாவில், நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1] மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமான அரசியல் கட்சிகள் உள்ள மாநிலம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. கட்சிகளின் வகைப்பாடுஇந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;
தேசியக் கட்சிகள்தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும். இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2] மாநிலக் கட்சிகள்மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற:
இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2][4]
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள்இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன கட்சிகள்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia