புனித லாரன்சு
புனித லாரன்சு அல்லது உரோமை நகர புனித லாரன்சு (Lawrence of Rome அல்லது Saint Lawrence, (கிபி 225 - 258) என்பவர் 258-ஆம் ஆண்டு உரோமை நகரில் கொல்லப்பட்ட ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவர்.[1] வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். இதனால் கோபமடைந்த அரசன் இவரை வாணலியில் வறுத்துக் கொல்ல தீர்ப்பிட்டான் என பாரம்பரியம் கூறுகிறது. தன்னை வறுத்துக் கொண்டிருந்தவர்களிடம் "இந்தப்பக்கம் வெந்துவிட்டது... மறுபக்கம் திருப்பி போடுங்கள்.." என்று நகைச்சுவையாகக் கூறினார் என்பர். மரபுப்படி இவர் இறந்ததாக நம்பப்படும் இடத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னர் ஒரு சிற்றாலயம் அமைத்தார். இது உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்களுல் ஒன்றாக துவக்கக்காலம் முதலே கருதப்பட்டது. இவ்வாலயத்தை திருத்தந்தை முதலாம் தாமசுஸ் சீமைத்து புனித இலாரன்சு பெருங்கோவிலாக மாற்றினார். படக்காட்சியகம்
ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia