புயல் பாடும் பாட்டு
புயல் பாடும் பாட்டு (Puyal Paadum Paattu) என்பது 1987 இல் மணிவண்ணன் இயக்கத்திலும் மு. கருணாநிதியின் எழுத்திலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 1986 இல் மலையாளத்தில் வெளிவந்த பிரணமம் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1] இத்திரைப்படத்தில் இராதிகா ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். வினு சக்ரவர்த்தி, முரளி, மாஸ்டர் ஹாஜா ஷெரிப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
கருப்பொருள்படத்தின் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்று போதைக்கு அடிமையாவது.[2] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "வேல் முருகனுக்கு" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைந்தது.[5][6]
வெளியீடும் வரவேற்பும்புயல் பாடும் பாட்டு 1987 அக்டோபர் 21 தீபாவளியன்று[7] வெளியிடப்பட்டது.[8][9] இந்தியன் எக்சுபிரசு இவ்வாறு எழுதியது, "வளாகக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நடனக் கலைஞர்களின் துள்ளல், கவர்ச்சியான உடைகள், பாடல்களில் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான இசை, தாளங்கள், இளமை துடிப்பின் வேகம் ஆகியவை அழகாக வருகின்றன".[10] இடைவேளைக்குப் பிறகு, படம் வேகத்தையும் அமைதியையும் கொண்டிருக்கவில்லை என்பதால் கல்கியின் ஜெயமன்மதன், இத்திரைப்படத்தை அவசரம் என்று உணர்ந்தார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia