புரோமோபென்சீன்
புரோமோபென்சீன்(Bromobenzene) என்பது C6H5Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரைல் ஆலைடான இச்சேர்மம், புரோமினைப் பயன்படுத்தி பென்சீனை அரோமாட்டிக் எலக்ட்ரான்நாட்ட பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் உருவாகிறது. நிறமற்ற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் தெளிவான நீர்மமாக புரோமோபென்சீன் காணப்படுகிறது. மெத்தனால், டை மெத்தில் ஈதர் ஆகிய கரிமக் கரைப்பான்களில் நன்றாகவும், குளிர் நீரில் சிறிதளவும் கரையக்கூடியதாக உள்ளது[1]. பென்சீனுடன் எத்தனை புரோமின் அணுக்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது கூடுதலாக பதிலீடு செய்யப்பட்டிருந்தாலும் அரிதாக சிலசமயங்களில் அவற்றை புரோமோபென்சீன் என்ற சொல்லாலேயே அழைக்கிறார்கள். தயாரிப்புதொழிற்சாலைகளில் இரும்புத்தூள் முன்னிலையில் பென்சீனுடன் புரோமினைச் சேர்த்து தொகுப்புமுறையில் புரோமோபென்சீன் தயாரிக்கிறார்கள். பயன்கள்சுசுகி வினை போன்ற பலேடியம் வினையூக்க இணைப்பு வினைகள் வழியாக பீனைல் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கு புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. தொடர்புடைய கிரிக்னார்டு வினைப்பொருளான பீனைல்மக்னீசியம் புரோமைடு தயாரிப்பதற்கு புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதனுடன் கார்பன் டை ஆக்சைடு சேர்த்து பென்சாயிக் அமிலம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெருமளவில் பென்சைக்கிளிடின் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் புரோமோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல்புரோமோபென்சீன் ஒரு நச்சுப்பொருளாகும். இதை சுவாசிக்க நேரிட்டாலோ அல்லது தோலின் வழியாக உட்கிரகிக்கப்பட்டாலோ கல்லீரல் மற்றும் நரம்புத் தொகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும் [2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia