புரோலின்(Proline) என்பது C5H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமினோ அமிலம் ஆகும். இதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை HO2CCH(NH[CH2])3.என்று எழுதுகிறார்கள். CCU, CCC, CCA மற்றும் CCG போன்ற மரபுக்குறிமுறையன்களால் இது குறிக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலம் புரதங்களைத் தயாரிக்கும் உயிரினத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் α-அமினோ அமிலக் குழுவும், ஓர் α-கார்பாக்சிலிக் அமிலமும் புரோலினில் இடம்பெற்றுள்ளன. முனைவற்ற அலிபாட்டிக் அமினோ அமிலம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள். மனித உடலுக்கு அத்தியாவசியமற்ற அமினோ அமிலம் புரோலினாகும். அத்தியாவசியமற்ற அமினோ அமிலமான எல் குளுட்டாமேட்டிலிருந்து மனித உடல் இதைத் தயாரித்துக் கொள்கிறது.
புரோலின் மட்டுமே இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்து புரதமாகும் அமினோ அமிலமாகும். இதிலுள்ள ஆல்பா-அமிலக் குழுவானது நேரடியாகப் பக்கச் சங்கிலியுடன் இணைந்து ஆல்பா-கார்பனை பக்கச் சங்கிலிக்கு ஒரு நேரடியான பதிலீடாக்குக்கிறது.