புரதமாக்கா அமினோ அமிலங்கள் (non-proteinogenic amino acids) முதலில் புரதங்களில் காணப்படுவதில்லை (உதாரணமாக, கார்னிதின், காமா அமினோ புயூட்டைரிக் காடி (GABA) (அ) L-DOPA). மேலும், புரதமாக்கா அமினோ அமிலங்கள் நேரடியாகவோ (அ) தனித்தோ நிறுவப்பட்ட புரதப் பெயர்ப்பின்போதும் உருவாக்கப்படுவதில்லை (உதாரணமாக, ஹைட்ராக்சிபுரோலின் மற்றும் செலீனோமெத்தியோனின்). பிந்தையவை புரதப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் விளைபவை. புரதமாக்கா அமினோ அமிலங்கள் ரைபோசோம் தவிர்த்த புரதக்கூறுகளில் காணப்படுகின்றது. இவை, புரதப் பெயர்ப்பின்போது ரைபோசோம்களால் உருவாக்கப்படுவதில்லை.
சிலவேளைகளில், ஒரு அமினோ அமிலத்தின் தெளிவான அடையாளம் பொருள்மயக்கமற்று அறிய முடிவதில்லை. புரத வரிசை வழிமுறைகள் சில இணைகளை வேறுபடுத்துவதில்லை. எனவே, கீழுள்ளக் குறிமுறையன்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன:
புரதம் மற்றும் புரதக்கூறுகளின் பொருண்மை நிரலாய்வில், படிவுகளின் நிறையைக் கண்டறிவது முக்கியம். புரதம் மற்றும் புரதக்கூறுகளின் நிறையானது படிவுகளின் நிறை மற்றும் நீர் மூலக்கூற்று நிறையின் கூட்டுத்தொகையாகும்.[2]
விகிதவியல் மற்றும் உயிரணுவில் வளர்சிதைமாற்ற ஆக்கச் செலவு
கீழ் வரும் அட்டவணை ஈ.கோலை பாக்டீரியாவில் உள்ள அமினோ அமிலங்களின் செழிப்பையும், இந்த அமினோ அமிலங்களைத் தொகுக்க ஆகும் வளர்சிதைமாற்றச் சக்தி (ATP) செலவினையும் பட்டியலிடுகிறது. குறை எண்கள், இந்த அமினோ அமிலங்களின் வளர்சிதைமாற்ற நிகழ்வு சக்தி (ATP) செலவினத்திற்கு சாதகமானது என்பதையும், இந்நிகழ்வினால் உயிரணுவிற்கு மொத்த சக்தி செலவில்லை என்பதையும் குறிக்கின்றது.[3] அமினோ அமிலங்களின் செழிப்பு என்பது அமினோ அமிலங்கள் கட்டறு வடிவத்திலும், புரதங்களில் உள்ள பல்படியாக்க வடிவத்திலும் உள்ள மொத்தச் செழிப்பைக் குறிப்பிடுகின்றது.
இது, உடலில் மிக அதிகமாகக் காணப்படும் அமினோ அமிலமாகும். மிகவும் சுழலும் திறம் வாய்ந்தது. என்றாலும் கிளைசினைக் காட்டிலும் வளையாதத் தன்மை கொண்டது. ஆனால், அமைப்பில் சிறியதாக உள்ளதால் புரதக்கட்டமைப்பிற்கு சிறிய அளவே இடத்தடங்கலை விளைவிக்கக் கூடியது.
செரின் மற்றும் திரியோனின் அமினோ அமிலங்கள் ஹைட்ராக்சில் செயல் தொகுதியைக் கொண்ட சிறிய தொகுதியை முடிவில் கொண்டுள்ளன. இவற்றின் ஹைட்ரசன்அணு எளிதில் நீக்கக்கூடியதாக உள்ளதால் செரின் மற்றும் திரியோனின்அமினோ அமிலங்கள்நொதியங்களில் அடிக்கடி ஹைட்ரசன் வழங்கியாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டு அமினோ அமிலங்களும் நீர்விலக்கிகளாக உள்ளதால் கரையும் புரதங்களின் வெளிப் பகுதிகளில் செறிவாகக் காணப்படுகின்றன.
பினைல்அலனின் (டைரோசின் முன்னோடி) மற்றும் டிரிப்டோபான் போலவே வினை புரிகிறது. மெலனின், எபிநெப்ரின் மற்றும் கேடய (தைராய்டு) இயக்குநீர் ஆகியவற்றுக்கான முன்னோடி. இயற்கையாகவே ஒளிரும் தன்மை கொண்டது. எனினும், சாதாரணமாக சக்தியை டிரிப்டோபானுக்கு இடம் மாற்றுவதன் மூலம் இதன் ஒளியுமிழ்தல் தணிக்கப்படுகிறது.