புலியூர் சுப்ரமணியம் நாராயணசுவாமி
புலியூர் சுப்பிரமணியம் நாராயணசுவாமி (Puliyur Subramaniam Narayanaswamy)(24 பிப்ரவரி 1934 - 16 அக்டோபர் 2020) என்பவர் கருநாடக இசைப் பாடகர் ஆவார். தொழில்நாராயணசுவாமி, திருப்பாம்புரம் சோமசுந்தரம் பிள்ளை, த. மா. தியாகராஜன் ஆகியோரிடமும், பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயரிடமும் இசை கற்றார். இவர் மிகவும் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் இருந்தார்.[1] தனது 12 வயதில் பாலகான கலா ரத்தினம் பட்டம் பெற்றார். பின்னர் அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்தார்.[2] 1999ஆம் ஆண்டில், இசை அகாதமி இவருக்கு 'சங்கீத கலா ஆச்சார்யா' என்ற பட்டத்தினை வழங்கியது.[3] 2003-ல் இந்திய அரசால் இவருக்கு ’பத்ம பூசண்' விருதினை வழங்கியது.[1][4][5][6] ரஞ்சனி காயத்ரி, அபிசேக் ரகுராம், காயத்ரி வெங்கடராகவன், அமிர்தா முரளி, குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா மற்றும் அக்கரை சகோதரிகள் இவரது நன்கு அறியப்பட்ட சீடர்கள் ஆவர். நாராயணசுவாமி, 16 அக்டோபர் 2020 அன்று காலமானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia