திருப்பாம்புரம்
அமைவிடம்கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.[6] இந்தப் பகுதி பண்டைய சோழ நாடு ஆகும். ஊர் சிறப்புஇங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன. பிரபல நபர்கள்திருப்பாம்புரம் பிரபல இசை வித்துவான்களின் பிறப்பிடமாகும். நாதசுவர வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, அவரது மகனும் பிரபல புல்லாங்குழல் வித்துவானுமாகிய திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்களே. மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia