பு. ரவிசங்கர்புதிபேடி ரவி சங்கர் (P. Ravi Shankar (28 நவம்பர் 1966 அன்று பிறந்தார்) மேலும் இவர் கேம்பகவுதா ரவி, ஆர்முக ரவிசங்கர் , பொம்மலி ரவி சங்கர் மற்றும் சாய் ரவி ஆகிய பெயர்களிலும் அறியப்படும் இவர் [1] கலைஞர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் , இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் வெளியான சுதீப் நடித்து வெற்றி பெற்ற கெம்பே கவுடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார்.[2][3][4] ஒரு சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தலா 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கும் மொத்தமாக 2600 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.[5] 150 க்கும் மேற்பட்ட கன்னட படங்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் நடிகர் சாய்குமார் புதிபெட்டியின் சகோதரர் ஆவார்.[5] சிறந்த ஆண் பின்னணிக் குரல் கலைஞருக்கான ஒன்பது மாநில நந்தி விருதுகளையும், சிறந்த ஆண் பின்னணிக் குரல் கலைஞருக்கான இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதையும் வென்றார் . 2004 ஆம் ஆண்டில் கன்னடத் திரைப்படமான துர்கி மூலம் இயக்குநராக அறிமுகமானார். வசன எழுத்தாளராகவும் பணியாற்றிய அவர் 75 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களுக்கும் 150 தமிழ் படங்களுக்கும் வசனங்களை எழுதினார். ரத்தசரித்ரா மற்றும் பெஜவதா ஆகிய திரைப்படங்களில் இவர் பின்னணிப் பாடல்களைப் பாடினார் .[6] கெம்பே கவுடா படத்தில் நடித்ததற்காக அவர் தனது முதல் பிலிம்பேர் விருதை வென்றார்.[7] தனிப்பட்ட வாழ்க்கைதமிழ்நாட்டின் சென்னையில் இவர் வளர்ந்தார். ரவியின் தாய் கிருஷ்ணா ஜோதி புதிபெட்டி ஒரு தெலுங்கு நடிகை ஆவார். கன்னடத்தின் பிரபல நடிகரான டாக்டர் ராஜ்குமார் மற்றும் பிறருடன் ஸ்ரீ கிருஷ்ணா கருடி, மக்கால ராஜ்ய மற்றும் பிற படங்களில் நடித்தார். புதிபெட்டியின் தந்தை புதிபெட்டி ஜோகேஸ்வர சர்மாவும் ஒரு நடிகரும் பின்னனிக் குரல் கலைஞர் ஆவார். அவர் பல தெலுங்கு, கன்னட மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றினார். அவரது அண்ணன் புதிபெட்டி சாய்குமார் பின்னனிக் குரல் கலைஞராகப் பணிபுரிந்தார்.பின்னர் இவர் தெலுங்கில் மிகவும் வெற்றிகரமான நடிகரானார்.[5] இவர் சுசில் புதிபெட்டி என்ற பஞ்சாபி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஆத்வே புதிபெட்டி என்ற ஒரு மகன் உள்ளார். தொழில்பி.ரவிசங்கர் 1986 ஆம் ஆண்டில் ஆர்.நாராயண மூர்த்தியின் ஆலோச்சின்சந்தி திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் அறிமுகமானார்.[5] பின்னர் அவர் மதுரா நாகரிலோ, கீச்சுரல்லு போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டில் கோபி சந்தின் முதல் படமான தோலி வலப்பு மூலம் மீண்டும் வில்லனாக மீண்டும் நடித்தார். அவரது நடிப்பு மற்றும் பின்னனிக் குரல் கொடுப்பது போன்றவை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது, ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை[8] இவரது படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறாததால் இவர் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக ஆனார். தெலுங்குத் திரைப்படமான ரவுடிசம் ஜிந்தாபாத் மூலம் பின்னணிக் குரல் கலைஞராக இவர் அறிமுகமானார். அங்கு அவர் தமிழ் நடிகர் மோகன்ராஜுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.மேலும் இவர் ரகுவரன், மோகன் ராஜ், தேவராஜ், சரண் ராஜ், கேப்டன் ராஜு, நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், அசுதோஷ் ராணா, சோனு சூத், முகேஷ் ரிஷி, உபேந்திரா மற்றும் பிரதீப் ராவத் முதலிய நடிகர்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் தலா 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கும், கன்னடத்தில் 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கும் 4000 க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இவர் குரல் கொடுத்தார்.[9] 2004 ஆம் ஆண்டில் துர்கி எனும் கன்னடத் திரைப்படத்தை இயக்கினார் . இந்தத் திரைப்படம் தெலுங்கில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. அதில் என்.டி.ராமாராவ் ராவ் ஜூனியர், அமீஷா பட்டேல் ஆகியோர் நடித்தனர். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia