அமீஷா பட்டேல்
அமீசா பட்டேல் (Ameesha Patel: பிறப்பு 9 ஜூன் 1975) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் பாலிவுட் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார். பிலிம்பேர் விருது மற்றும் ஜீ திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அமீசா பட்டேல் 2000 ஆம் ஆண்டில் கஹோ நா... பியார் ஹை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இத்திரைப்படமானது வணிக நோக்கில் வெற்றி பெற்றது. அதிக வருவாயை கொடுத்த பத்ரி (2000) மற்றும் கதர்: ஏக் பிரேம் கதா (2001) போன்ற படங்களிலும் நடித்தார். இரண்டாவது படம் இவருக்கு பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.[1] பின்னர், ஹம்ராஸ் (2000) மற்றும் கியா யேஹி பியார் ஹை (2000) போன்ற படங்களில் நடித்தார். ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (2007), பூல் பூலையா (2007) மற்றும் ரேஸ் 2 (2013) போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார். தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, கதர் 2 (2023) என்ற படத்தில் நடித்தார். இது இவரது திரை வாழ்க்கையை மீட்டெடுத்தது. மேலும் அதிக வருவாயை தந்தது.[2] இளமை வாழ்க்கைஅமிசா 9 சூன் 1975 அன்று மும்பையில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அமித் படேல் ஒரு தொழிலதிபர், மற்றும் அவரது தாயார் ஆசா படேல்.[3] தனது ஐந்து வயதிலிருந்தே பரதநாட்டிய நடனக் கலைஞராக இருந்து வருகிறார்.[4][5][6][7] இவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி படித்தார். பின்னர் அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் உயிரியல் மரபணு பொறியியல் பயின்றார்.[4] பிறகு, கந்த்வாலா செக்யூரிட்டீஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராக சேர்ந்தார். பின்னர், மோர்கன் ஸ்டான்லியில் ஒரு வேலையைப் பெற்றார். ஆனால் பணியில் சேராமல் இந்தியா திரும்பி, சத்யதேவ் துபேவின் நாடகக் குழுவில் சேர்ந்து, தன்வீர் கான் எழுதிய நீலம் (1999) என்ற உருது மொழி நாடகம் உட்பட நாடகங்களில் நடித்தார்.[8] அதே நேரத்தில் பல வணிக நிறுவனங்களில் வடிவழகியாகத் தோன்றினார்.பஜாஜ், பேர் அண்ட் லவ்லி, காட்பரீஸ், பெம், லக்சு போன்ற பல பிரபலமான இந்தியப் பொருட்களுகக்கான விளம்பரங்களில் அமீசா பட்டேல் தோன்றினார். இவரது தாத்தா ரஜ்னி பட்டேல் ஒரு வழக்கறிஞரும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். மும்பையில் உள்ள ஒரு தெருவிற்கு பாரிஸ்ட்டர் ரஜனி பட்டேல் மார்ஜ் என்று 1986 இல் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[9] ![]() மற்ற வேலைகள்.![]() அமீசா பட்டேல், கிருத்திக் ரோஷனுடன் இணைந்துபல இசைக்க்சேரிகளுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றார். த ரோஷன்ஸ்: ரித்திக் லைவ் இன் கான்செர்ட் (2001) அவரது முதல் உலகச் சுற்றுலா ஆகும். 2004 ஆம் ஆண்டில், கிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் மற்றும் லாரா தத்தா ஆகியோருடன் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2005 ஆம் ஆண்டில், அட்னன் சமியின் குச் தில் சே என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது ஏப்ரல் 15 முதல் மே 15 வரை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் நிகழ்த்தப்பட்டது.[10] அக்டோபர் 2008 இல், ஹிமேஷ் ரேஷாமியாவின் கர்ஸ் மியூசிக்கல் கர்டன் ரைசர் என்ற இசைக்கச்சேரியில் நேஹா துபியா, ரியா சென் மற்றும் அமிர்தா அரோரா ஆகியோருடன் கலந்து கொண்டார்.[11] டிசம்பர் 2008 இல், அக்சய் குமாரின் சாந்தினி சௌக் டு ஹாங் என்ற கிறித்துமஸ் தின நிகழ்ச்சியில் பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, ரியா சென், ஆர்த்தி சாப்ரியா மற்றும் ஹிமேஷ் ரேஷாமியா ஆகியோருடன் இசை கச்சேரிகளில் பங்கேற்றார். மேலும் அக்சய் குமாரின் சாந்தினி சௌக் டு சீனா (2009) திரைப்படத்தின் விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பங்கேற்றார். 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்களின் காரணமாக, 2009 ஆம் ஆண்டிற்கான பல புத்தாண்டு கச்சேரிகள் இரத்து செய்யப்பட்டன. சமூக ஆர்வம்2004 செப்டம்பரில், விலங்குகளின் நலனுக்காக போராடும் அமைப்பான பீட்டாவுடன் அமீசா சேர்ந்தார். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்ப்ட்டவர்களுக்காக பிப்ரவரி 2005 இல், மற்ற பாலிவுட் நட்சத்திரங்களுடன் சேர்ந்து, அமீசா பட்டேல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[12] 2005 டிசம்பர் 24 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி மையத்தில் நடைபெற்ற டெம்ப்டேஷன்ஸ் 2005 என்ற விழாவில் பங்கேற்றார். இது ஒரு ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்திற்கு உதவியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.[12] நவம்பர் 2006 இல், அமீசா பட்டேல் பிளானட் ரீட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார். இது கிராமங்களில் உள்ள மக்கள் திரைப்பட பாடல்கள் மூலம் படிக்க கற்றுக்கொள்ள உதவுகிறது.[13] அக்டோபர் 2007 இல், ஜான் ஆபிரகாம் மற்றும் கிர்ரான் கெர் ஆகியோருடன் இந்தியாவில் மனித கடத்தலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்களின் மீதான ஒருங்கிணைந்த தேசிய அலுவலகத்தில் சேர்ந்தார்.[14] சொந்த வாழ்க்கை1999 ஆம் ஆண்டில், அமீசா பட்டேல் ஆப் முஜே அச்சே லக்னே லகே படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் பட்டைச் சந்தித்து அவருடன் நட்பில் இருந்தார்.[15] பின்னர், அமீசாவின் தந்தையின் மோசமான வணிக நிர்வாகத்தால் இவர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டதால் இது அமீசா மற்றும் விக்ரம் பட் குடும்பங்களுக்கு இடையே பிளவை உண்டாயிற்று .[16][17] [18] சனவரி 2008 இல், இவர்கள் தங்கள் ஐந்து ஆண்டு உறவை முறித்துக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[19] [20] சர்ச்சைகள்நியூயார்க்கில் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள 2006 ஆகத்து 18 அன்று மும்பை-நியூயார்க் விமானத்தில் பயனித்த அமீசா தனது தோழருக்கு முதல் வகுப்பு விமானப் பயணம் உறுதியாகாததால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.[21][22] இவர் மீதான குற்றச்சாட்டுகள் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் விசாரிக்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.[23] மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia