பூட்னி, மால்டா
பூட்னி (Bhutni) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திலுள்ள ஓர் தீவாகும். [1] இந்த தீவு மாணிக்சாக் சமூக மேம்பாட்டுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது கங்கை ஆறு மற்றும் புலாகர் ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. [2] நிலவியல்இந்தத் தீவு 25.1307 ° வடக்கிலும் 87.8709 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. புள்ளிவிவரங்கள்இந்த தீவில் மாணிக்சாக் தொகுதியின் 7 கிராம பஞ்சாயத்துகளில் தென் சந்திப்பூர், மத்திய சந்திப்பூர் மற்றும் கிரானந்தபூர் என்ற மூன்று கிரமப் பஞ்சாயத்துகள் உள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூட்னி தீவின் மொத்த மக்கள் தொகை 89021 என்ற அளவிலிருந்தனர். அவர்களில் 46052 ஆண்களும், 42969 பெண்களும் அடங்குவர். பட்டியலிடப்பட்ட சாதிகள் 30149 ஆகவும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 33063 பேர் என உள்ளனர். [3] பூட்னியில் சுமார் 63 கிராமங்கள் உள்ளன. இதில் மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஒரு பழங்கால மதராசா, ஒரு அரசு நூலகம், ஐந்து அஞ்சல் நிலையங்கள், நான்கு வணிக வங்கிகள் மற்றும் ஒரு கிராமப்புற மருத்துவமனை ஆகியன உள்ளது. பூட்னிக்கு பயணிக்க ஒரே வழி படகு மூலம் தான், ஆனால் சமீபத்தில் 1.8 கிலோமீட்டர் நீளமுள்ள (1.1 மைல்) பாலம் கட்டுமானத்தில் உள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்படும். இந்த பாலத்திற்கு மேற்கு வங்காள அரசாங்கத்தின் ஒரு பகுதியான வட வங்க மேம்பாட்டு வாரியம் நிதியளிக்கிறது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia