பூந்தி நகரம்
![]() பூந்தி (Bundi) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பூந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1,04,457 ஆகும்.[1] பூந்தி நகரம் படிக்கிணறு, அரண்மனை மற்றும் கோட்டைக்கும் பெயர் பெற்றது. மேலும் இது முன்னாள் பூந்தி இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். புவியியல்பூந்தி நகரம், கோட்டாவிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் ஜெய்பூரிலிருந்து 210 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 25°26′N 75°38′E / 25.44°N 75.64°E பாகையில் அமைந்துள்ள பூந்தி நகரம், கடல் மட்டத்திலிருந்து 368 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஆரவல்லி மலைத்தொடர்கள் உள்ளது. நான்கு நுழைவு வாயில்கள் கொண்ட கோட்டைச் சுவர்கள், இந்நகரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பூந்தி நகரத்தின் மக்கள்தொகை 1,04,919 ஆகும்.[2][3] பூந்தி நகர மக்கள்தொகையில் ஆண்கள் 54,485 ஆகவும்; பெண்கள் 50,434 ஆகவும் உள்ளனர்.[1] சராசரி எழுத்தறிவு 82.04 % ஆகவுள்ளது. பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 926 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 74.29 % ஆகவும்; இசுலாமியர் 21.47% ஆகவும்; சமணர்கள் 3.12% ஆகவும்; பிற சமயத்தவர்கள் 1.12% ஆகவும் உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Bundi என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia