பூந்தோட்ட காவல்காரன்
பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், இதனை அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விசுவநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க 1988 ஆம் ஆண்டு சூன் 10ஆம் தேதி வெளியானது. நடிகர்கள்
தயாரிப்புசெந்தில்நாதன், எம்.ஜி.ராமசந்திரனை வைத்து நம் நாடு படத்தை இயக்கிய ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார். எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் வி.அழகப்பன் ஆகியோரிடம் முன்னாள் உதவியாளராகப் பணியாற்றிய செந்தில்நாதன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பாடல்கள்இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். [1]
வரவேற்புஇந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி செந்தில்நாதன் இயக்கிய படங்களில் தலைசிறந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 1980 களில் வந்த அதிரடி சார்ந்த படங்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இப்படம் அறியச் செய்தது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia