பாண்டியன் (நடிகர்)
பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1] மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்றவை இவருக்கு பெயர் பெற்று தந்தன. நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார். திரைப்படவியல்
தொலைக்காட்சித் தொடர்
இறப்புநோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் 2008 சனவரி 10 அன்று மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48-ஆவது வயதில் காலமானார். இவருக்கு இலதா என்ற மனைவியும், இரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia