பூவை எஸ். ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம் (பிறப்பு: 31. சனவரி 1927-2003) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர் கார்த்திகை பாலன், மறைநாயகம், இளையபிரான், பிறைசூடி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.[1] எஸ். ஆறுமுகம் என்ற இவர் தனது ஊர் பெயரான பூவை என்ற பெயரை தனது பெயரின் முற்பகுதியில் சேர்த்துக்கொண்டார்.

வாழ்க்கை

பூவை ஆறுமுகம் 1927ஆம் ஆண்டு சனவரி 31ம் நாள் தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தனது கல்வியை முடித்தபிறகு, ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலராக ஆனார். மேலும் “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.

எழுத்துப் பணிகள்

இவரது முதல் கதையான கரகம் சுதேசமித்திரனில் 15, ஆகத்து, 1949 அன்று வெளியானது. அதன் பிறகு இருநூற்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறு கதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகமானது, ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகமாகும். இவர் எழுதிய கீதை என்ற நாடகமானது தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளிபரப்பப்பட்டது.

திரையுலகப் பணிகள்

கூண்டுக்கிளி திரைப்படத்தின் கதை, உரையாடல் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இவரது மூலக்கதையைக் கொண்டு சொந்தங்கள் வாழ்க திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]

இயற்றியுள்ள நூல்கள்

  1. அந்த நாய்க்குட்டி எங்கே?
  2. அந்தி நிலாச் சதுரங்கம்
  3. அந்தித் தாமரை
  4. அமிர்தம்
  5. அமுதவள்ளி
  6. அவள் ஒரு மோகனம்
  7. அன்புத்தாய் மேகலை
  8. அன்னக்கிளி
  9. அன்னை தெரேசா
  10. ஆடும்தீபம்
  11. ஆலமரத்துப் பைங்கிளி
  12. இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்
  13. இதோ ஒரு சீதாப்பிராட்டி
  14. இனிய கதைகள்
  15. உயிரில் கலந்தது
  16. உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்!
  17. உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்
  18. ஏலக்காய்
  19. ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!
  20. ஓடிவந்த பையன்
  21. கடல் முத்து
  22. கதாநாயகி
  23. கரை மணலும், காகித ஓடமும்
  24. கல்கி முதல் அகிலன் வரை
  25. கவிஞரைச் சந்தித்தேன்
  26. களத்துமேடு
  27. கன்னித்தொழுவம்
  28. காணி நிலம் வேண்டும்
  29. காதல் மாயை
  30. காந்தி வழிக் கதைகள்
  31. கால்படி அரிசி ஆத்மா
  32. சமுதாயம் ஒரு சைனா பஜார்
  33. சிறுகதைக் கோவை
  34. சீதைக்கு ஒரு பொன்மான்
  35. சொல்லித் தெரிவதில்லை
  36. தஞ்சை சிறுகதைகள்
  37. தரை தட்டிய கப்பல்
  38. தாய்மண்
  39. தாய்வீட்டுச் சீர்
  40. தாயின் மணிக்கொடி
  41. தாஷ்கண்ட் வீடு
  42. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
  43. திருமதி சிற்றம்பலம்
  44. தென்னாட்டு காந்தி
  45. தெம்மாங்குத் தெய்வான
  46. தேவலோகப் பாரிஜாதம்
  47. நலம் தரும் நாட்டு மருந்துகள்
  48. நித்தியமல்லி
  49. நிதர்சனங்கள்
  50. நீ சிரித்த வேளை
  51. பத்தினிப் பெண் வேண்டும்
  52. பாபுஜியின் பாபு
  53. பாரதச் சிறுவனின் வெற்றிப்பரிசு
  54. பிரசவ கால ஆலோசனைகள்
  55. பிள்ளைக் கலி
  56. புனைப்பெயரும், முதல் கதையும்
  57. பூ மணம்
  58. பூவையின் சிறுகதைகள்
  59. பேறுகாலப் பிரச்சனைகள்
  60. பொன்மணித்தீபம்
  61. மகாத்மா காந்திக்கு ஜே!
  62. மகுடி
  63. மருதாணி நகம்
  64. முதல் காளாஞ்சி
  65. லட்சிய பூமி
  66. வசந்த பைரவி
  67. விதியின் நாயகி
  68. விதியின் யாமினி
  69. விளையாட்டுத் தாலி
  70. விளையாட்டுத் தோழி
  71. வெண்ணிலவு நீ எனக்கு
  72. வேனில் விழா
  73. ஜாதி ரோஜா (நாடகம்)
  74. ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-32.htm பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
  2. அமுதவல்லி புதினத்தில் உள்ள, ஆசிரியர் குறிப்பு, 1993 பதிப்பு

வெளி இணைப்புகள்

பூவை எஸ். ஆறுமுகம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya