பெங் மிலியா
பெங் மிலியா (Beng Mealea அல்லது Bung Mealea, கம்போடிய மொழி: ប្រាសាទបឹងមាលា, தாமரைத் தடாகம்) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு கோவில் ஆகும். இது அங்கோர் வாட் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டது. இரண்டாம் சூரியவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட இவ்வாலயம் சியாம் ரீப் நகரில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும், அங்கோர் வாட் கோயிலில் இருந்து 40 கி.மீ. கிழக்கேயும் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு இந்துக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும், பௌத்தக் கருத்துகளுடன் கூடிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.[1]மணற்கற்களால் கட்டப்பட்ட இவ்வாலயத்தை பெரும் மரங்கள், மற்றும் பற்றைகள் சூழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக இக்கோவிலுக்குள் செல்ல முடியாமல் இருந்தது. தற்போது இதற்கு சியாம் ரீப் நகரில் இருந்து செல்வதற்கு பாதைகள் உள்ளன. இதன் கட்டிட அமைப்பு அங்கோர் வாட் கோவிலை ஒத்திருப்பதால இது இரண்டாம் சூரியவர்மனால் 12ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[1] படக் காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia