Source for regions with significant population:[26]
சினாய் தீபகற்பத்தில் வாழும் பெடோயின் மக்கள் ஆண்டு, 1967பெடோயின் பழங்குடி போர் வீரன், ஆண்டு 1914சிரியா பாலைவன பெடோயின் மக்கள், ஆண்டு 1950
பெடோயின் மக்கள் (Bedouin, Beduin அல்லது Bedu) பாலைவனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடி மக்கள் ஆவர்.[27] இம்மக்கள் வட ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், மெசொப்பொத்தேமியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் வாழ்கின்றனர்.[28][29]பெடோயின்களின் தாயகம் சிரிய பாலைவனம் மற்றும் அரேபியப் பாலைவனம் ஆகும். ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் பரவிய பிறகு மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்கா பெடோயின் மக்கள் பரவலாகப் பரவி வாழ்கின்றனர்.[30][31] பெடோயின் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு "பாலைவனத்தில் வசிப்பவர்" என்று பொருள்படும். இம்மக்கள் வரலாற்று ரீதியாக ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளை மேய்ப்பவர்களாக உள்ளனர். பெடோயின்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாத்தை கடைபிடிக்கின்றனர். இருப்பினும் வளமான பிறை பிரதேசங்களில் சிறிய அளவில் கிறிஸ்தவத்தை கடைபிடிக்கின்றனர்.[32][33][34][35]
நவீன நகர்ப்புற வாழ்க்கை முறைக்காக பல பெடோயின்கள் தங்கள் நாடோடி மற்றும் பழங்குடி மரபுகளை கைவிட்டாலும், மற்றவர்கள் பாரம்பரிய ஆயர் குல அமைப்பு, பாரம்பரிய இசை, கவிதை, நடனங்கள் மற்றும் பல கலாச்சார நடைமுறைகள் போன்ற பாரம்பரிய பெடோயின் கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். நகரமயமாக்கப்பட்ட பெடோயின்கள் பெரும்பாலும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் அவர்கள் மற்ற பெடோயின்களுடன் கூடி பல்வேறு பெடோயின் மரபுகளைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்- அவைகளில் ஒட்டகச் சவாரி, கவிதை வாசிப்பு மற்றும் பாரம்பரிய வாள் நடனங்கள் முதல் பாரம்பரிய கருவிகளை வாசிப்பது மற்றும் பாலைவனங்களின் கூடாரங்களை அமைத்தல் ஆகும்.
சமூகம்
கால்நடைகள் மேய்க்கும் நாடோடி வாழ்க்கை நடத்தும் பெடோயின் மக்கள் வீரம், விருந்தோம்பல், குடும்பத்திற்கு விசுவாசம் மற்றும் வம்சாவளியின் பெருமை கொண்டுள்ளனர். பெடோயின் பழங்குடியினர் ஒரு அரசாங்கம் அல்லது பேரரசு போன்ற ஒரு மைய சக்தியால் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக பழங்குடி தலைவர்களால் வழிநடத்தப்பட்டனர். சில தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பாலவனச் சோலைகளை மையப்படுத்தினர். அங்கு வணிகர்கள், பெடோயின் பழங்குடியினரால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் வழியாக வர்த்தகத்தை ஏற்பாடு செய்வார்கள். வளங்கள் ஏராளமாக இருக்கும்போது, பல பெடோயின் மக்களின் கூடாரங்கள் ஒன்றாகப் பயணிக்கும். இந்த குழுக்கள் சில சமயங்களில் ஆணாதிக்க பரம்பரையால் இணைக்கப்பட்டுள்ளது. பெடோயின் பழங்குடிகளில் பல பிரிவுகள் உள்ளது.