பெரியமேளம் (மங்கள இசை)

பெரியமேளம் குழுவினர்
பெரியமேளம் குழுவினர்

பெரியமேளம் (Periyamelam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு இசை வடிவமாகும். இது நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக் கருவிகளுடன் இசைக்கப்படுவதாகும்.[1][2] கோயில் சடங்குகளில் உற்சவர் புறப்பாடு, அபிடேகம், ஆராதனை, உச்சிக்காலப் பூசை போன்ற நிகழ்வுகளில் இது வாசிக்கப்படுகிறது. இறைவனுக்கு முதல் மரியாதையாக பெரிய மேளம் வாசித்தப் பின்பே, சின்னமேளம் என்று அழைக்கப்பட்ட பரதநாட்டிய நிகழ்சிகள் கோயில்களில் நடைபெற்று வந்துள்ளன.[3] சப்பானிய இசை அறிஞரான யோஷிடாகா தொராடா உலக இசை வடிவங்களில் ஈடு இணையற்றது என பெரியமேளத்தைக் கருதுகிறார்.[4] பெரியமேளம் என்னும் இசைவடிவம் மெல்ல மெல்ல மறைந்துவருவதாக கருதப்படுகிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. Percussioner International Audio Magazine. Sal Sofia Industries, Inc. 1984. p. 38. Retrieved 25 December 2012.
  2. https://www.wisdomlib.org/definition/periyamelam
  3. வ. ரவிக்குமார், நாகஸ்வர சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட நாகஸ்வர சிற்பி, கட்டுரை, இந்து தமிழ் சித்திரை மலர் 2021, பக்கம் 171
  4. எஸ். வி. ராஜதுரை, அஞ்சலி: யோஷிடாகா தெராடா, ஜப்பானிய அறிஞரின் பெரிய மேளம் மீதான தீராக் காதல், இந்து தமிழ், 2 ஏப்ரல் 2023
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya