சின்னமேளம்![]() தமிழ்நாட்டின் கோவில் சார்ந்த இசைக்குழுக்களின் ஒன்றான சின்னமேளம் குழு, சதிராட்டத்தை (சதிர் ஆட்டம்) மையமாகக் கொண்டது.[1]சின்னமேளம் குழுவில் சதிராட்டம் ஆடும் பெண் கலைஞர்கள், நட்டுவனார் (பாடும் கலைஞர்), குழலிசை, மிருதங்கம் மற்றும் தித்திக்காரர் எனப்படும் சுதியிசைக் கலைஞர்கள் இருப்பர்.[2] சதிராட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயர் சாதியினரால் பரதநாட்டியம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு ஆடப்பட்டுவருகிறது.[3][4] தோற்றம்தமிழர் நாட்டியக் கலையானது துவக்கக் காலத்தில் கூத்து என்ற பெயருடன் விளங்கியது. விஜயநகரப் பேரரசு ஆட்சியின் போது துவங்கிய சதிராட்டம், தமிழ்நாட்டில் செப்டம்பர் 1947 வரை சதிர் ஆட்டம், தாசியாட்டம், தேவரடியார் ஆட்டம் எனப்பெயர் பெற்று விளங்கியது. சதிராட்டக் குழுவினரை சின்னமேளம் என அழைக்கப்படுவது வழக்காக இருந்தது. அச்சமூகத்தினர் தற்காலத்தில் இசை வேளாளர் என்று அறியப்படுகின்றனர். தேவதாசி முறை ஒழிப்புசமூக நல ஆர்வலர் சு. முத்துலெட்சுமி ரெட்டியாரின் முயற்சியால் 9 அக்டோபர் 1947 அன்று தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் இயற்றப்ப்பட்டு தேவதாசி முறை தடை செய்யப்படும் வரை, தமிழகக் கோயில்களிலும் அது சார்ந்த நிகழ்வுகளிலும் நடத்தப்பட்ட சதிராட்டம் சின்னமேளம் குழுவினரிடம் இருந்தது. தேவதாசி முறை தடை செய்யப்பட்டதால் சின்னமேளத்தைச் சேர்ந்த கலைஞர்களின் சிலர் திரைப்படங்களில் ஆடியும், பாடியும் நடித்தனர். பெரும்பான்மை சின்னமேளக் கலைஞர்கள் வறுமையில் வாடினர். உதவித்தொகைநாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு, பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள சின்னமேளம் உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி, கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கருக்கலைப்பு / கருச்சிதைவு நிதியுதவி, இயற்கை மரணம் / ஈமச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரண உதவித் தொகை ஆகிய நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.[5] பெரிய மேளம்பெரிய மேளம் என்ற குழு இசையை முதன்மையாகக் கொண்டது. இக்குழுவில் நாகசுரம், தவில், ஒத்து, தாளம் போன்றவற்றைக் கொண்ட இசைக் குழுவினரைக் குறிக்கிறது பெரிய மேளக்காரர்கள் தற்போதும் கோயில் மற்றும் திருமணம் மற்றும் விழாக்களில் பங்காற்றி வருகின்றனர். இக்குழுவில் சதிராட்டம் ஆடும் பெண் கலைஞர்கள் இருப்பதில்லை. இதனையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia