பெருந்திணை என்பது பொருந்தாக் காம உறவு. இதனைத் தொல்காப்பிய இலக்கணம்அகத்திணையில் ஒன்றாகக் கொண்டு பாகுபாடு செய்துள்ளது. பெருந்திண என்பது பெரும்பான்மையோர் கொள்ளும் உறவு, மேன்மக்கள் மாட்டு நிகழும் உறவு என்று தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.[1] தொல்காப்பியத்துக்குச் சுமார் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணம் இதனைப் 'பெருந்திணைப் படலம்' என்னும் பெயரில் தனிப் பகுப்பாக வைத்துக்கொண்டு இலக்கணம் கூறுகிறது. இதனை இந்த இலக்கணம் 'அகப்புறம்' என்னும் பாகுபாட்டின் கீழ் வைத்து எண்ணுகிறது.
வடநூலார் கருத்து ஒப்பீடு
வடநூலார் திருமண முறைகள் எட்டு எனத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. [2] இவற்றில் முதலில் உள்ள நான்கும் கைக்கிளை என்றும், இறுதியில் உள்ள மூன்றும் பெருந்திணை என்றும் வகுத்துக்கொண்ட தொல்காப்பியம் இடையில் உள்ள கந்திருவர் [3] மணத்தை யாழோர் கூட்டம் எனப் பெயர் சூட்டி 'அன்பின் ஐந்திணை' எனக் கொண்டு விளக்குகிறது.
பெருந்திணை என்பது அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்று வடநூல் குறிப்பிடும் மூன்று வகையான மணமுறைகள். இவற்றில் அரும்பொருள் வினை என்பது ஆண்மகன் தன் திறமையை வெளிப்படுத்தித் திருமணம் செய்துகொள்வது. [4] இராக்கதம் என்பது விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைவது. [5]
பேய்நிலை என்பது மது மயக்கத்தில் கிடக்கும் பெண்ணிடமும், உறங்கும் பொண்ணிடமும் உறவு கொள்வது.[6]
புறநானூற்றில் பெருந்திணைப் பாடல்கள் ஐந்து உள்ளன. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்வதைத் தகாத செயல் என அக்காலப் புலவர்கள் எடுத்துக் கூறித் திருத்தும் பாடல்களாக அவை உள்ளன. [9] மேலே நாம் கண்ட தொல்காப்பிய நெறி இந்தப் பாடல்களில் இல்லை. தொல்காப்பியர் காட்டும் பெருந்திணையில் காதலன் தன் காதலியையும், அவளது பெற்றோர்களையும் தன் திருமணத்துக்கு உதவும்படி வற்புறுத்துகிறான். இது அகத்திணை. புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை, துறை வகுத்தவர் பன்னிரு படலம் என்னும் நூலைப் பின்பற்றியிருக்கிறார்.
நம்பியகப்பொருள் பெருந்திணையை இரண்டு வகையாகப் பிரித்துக்கொண்டு விளக்குகிறது.
அகப்பொருட் பெருந்திணை
பிரிவில் கலங்குதல், இணங்காவிட்டால் மடலேறுவேன் எனல், குறியிடத்தில் பெறமுடியாமல் போதல், நம்பியவரைக் கைவிடுதல், பெண்ணை வெறியாட வைத்தல், ஆணும் பெண்ணும் விரும்பிப் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போதல், மாதவிலக்கு பற்றிக் கூறுதல், பொய்யாக உறுதிமொழி கூறுதல், ஊடல்-பிணக்குப் பாட்டுக்கொண்டே காலம் கழித்தல், பொருள் தேடச் செல்பவனைப் போக விடாமல் தடுத்தல், போர்ப்பாசறையில் காதலியை நினைத்துப் புலம்பல், சொன்ன பருவத்தில் திரும்பாமை, தலைவன் வற்புறுத்தும்போது எதிர்த்துப் பேசுதல், கணவனும் மனைவியும் காட்டுக்குச் சென்று தவம் செய்தல் போன்றவை அகத்திணையில் நிகழும் பெருந்திணைச் செயல்கள். [10]
அகப்புறப் பெருந்திணை
மடலேறி வந்து மனைவியாக்கிக் கொள்ளுதல், காளையை அடக்கி மனைவியாக்கிக் கொள்ளுதல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபத நிலை, தபுதார நிலை, முதலான நிகழ்வுகள் அகப்புறப் பெருந்திணை எனப்படும். [11]
அறவழியில் அல்லாமல் மற-வழியில் இன்பம் துய்ப்பது பெருந்திணை.[52] இது நிலையில்லாமல் அவ்வப்போது தோன்றி மறையும் காதலாக இருக்கும். இந்தக் காதல் நீடிக்கவும் செய்யாது. இது அகத்திணை அன்று. அகப்புறம்.[53]
அடிக்குறிப்பு
↑"பொருள் அதிகாரம், இளம்பூரணர் உரை". தொல்காப்பியம். சாரதா பதிப்பகம். 2010. p. 404.
காமம் சாலா இளமையோள்வயின்,
ஏமம் சாலா இடும்பை எய்தி,
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து,
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே (தொல்காப்பியம், பொருளதிகாரம் 53)
↑திருக்குறளில் 'பொழுகு கண்டு இரங்கல்' என்னும் அதிகாரம் (123) உள்ளது. அதில் தலைவி தலைவன் இல்லாத மாலை நேரத்தோடு பேசி, அந்த நேரத்தை நொந்துகொள்கிறாள். இது அகப்பொருள். "மாலை நேரத்தில் அவன் வரவில்லை. அவனைப் பார்த்தாயா" என்று மற்றவர்களிடம் கேட்டால் அது பொருந்திணை.