பெஹிஸ்ட்டன் கல்வெட்டு34°23′26″N 47°26′9″E / 34.39056°N 47.43583°E
பெஹிஸ்ட்டன் கல்வெட்டு மூன்று வெவ்வேறுவிதமான ஆப்பெழுத்து (cuneiform) முறைகளில் பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். படஎழுத்து முறைக்கு ரொசெட்டா கல்வெட்டு எப்படியோ, அப்படியே ஆப்பெழுத்துக்கு இக் கல்வெட்டு ஆகும். ஆப்பெழுத்துக்களை வாசித்து அறிவதில் இக்கல்வெட்டுப் பெரும் பங்காற்றியது. இது ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ளது.[1][2][3] பிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள். இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia