பேச்சு:நெய்வேலி காட்டாமணக்குநல்ல கட்டுரையை எழுதியுள்ளீர்கள் சிங்கமுகன்! வேலிகாத்தான் என்றழைக்கப்படுவதும் என்பது இது தானே! உயிரியலில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எழுதி வருகிறீர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்! துறை சார் கட்டுரைகளை எழுதும் போது சொல் குறித்த உரையாடல்கள் நீள வாய்ப்புள்ளது. அந்த உரையாடல்கள் ஆரோக்கியமாக அமையட்டும்! - பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 14:18, 13 மார்ச் 2011 (UTC) கார்த்திகேயன் அவர்களுக்கு, இதன் பெயர் காட்டாமணி அல்லது நெய்வேலி காட்டாமணக்கு என அழைப்பார்கள். வேலிகாத்தான் என்பது நாம் பரவலாக அறிந்த முட்செடியாகும். இங்கு விக்கிப்பீடியாவில் சீமை கருவேலமரம் என்றத் தலைப்பில் உள்ளது. நன்றிகளுடன் - --சிங்கமுகன் 17:40, 13 மார்ச் 2011 (UTC)
கார்த்திகேயன் அவர்களுக்கு, காட்டாமணக்கு என்பது Jatropha curcas ஆகும். இதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். வேலிக்காத்தான் மற்றும் காட்டாமணி இரண்டுமே நச்சு தான். இரண்டையுமே நாட்டை விட்டு அகற்றினால் தான் விவசாயம் செழிக்கும். இந்தப் போராட்டம் போதாது. இதைவிட பன்மடங்குத் தேவை நாடுசெழிக்க. நன்றிகளுடன். --சிங்கமுகன் 19:16, 15 மார்ச் 2011 (UTC) |
Portal di Ensiklopedia Dunia