இத்திட்டம் உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பயனர்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும்.
முதலில், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து இந்திய மற்றும் இலங்கை பகுதியில் வாழும் விலங்குகள், நிலைத்திணை வகைகள் (தாவரங்கள்), அவற்றின் மூலக்கூற்று உயிரியல் தரவுகள், சூழியல் குறித்த கட்டுரைகளை இங்கே சேர்க்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில், தங்களால் இயன்ற அளவுக்குத் தேடுபொறி உதவியுடன் தகுந்த ஆதாரங்களுடன் தமிழில் நிறைவான கட்டுரைகளை இயற்றவும்.
விக்கித் திட்டம் உயிரியல் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் உயிரியல்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.
விக்கித்திட்டம் உயிரியல் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உடன் செய்ய வேண்டியவை
மேற்கோள் சுட்டுதல்
உயிரியல் தொடர்பான பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.
தரம் பிரித்தல்
கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.
அடிக்கடி பயன்படக்கூடிய உயிரியல் உசாத்துணைகளையும், பிற சான்றுகளையும் குறிப்பிடவும். இவற்றை வைத்திருக்கும் பயனர்களின் பெயரையும் பதிந்து வைத்தால் தேவைப்படும்போது கேட்டுக்கொள்ளலாம்.
தமிழகம் மற்றும் இலங்கையில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய கட்டுரைகள் - இத்தலைப்புகளில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது இப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் (தோராய எண்ணிக்கை = 200 கட்டுரைகள்)