பாகிஸ்தான் மீது இந்தியா போர்ப் பிரகடனம் செய்யவில்லை. 2025 பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கையாக, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு இந்திய அரசு சிந்தூர் நடவடிக்கை எனப்பெயரிட்டுள்ளது. எனவே இக்கட்டுரையின் தலைப்பிற்கு 2025 சிந்தூர் நடவடிக்கை எனப்பெயரிடுவது சாலச் சிறந்தது. Sumathy1959 (பேச்சு) 10:33, 8 மே 2025 (UTC)[பதிலளி]
- @Sumathy1959 தலைப்பு குறித்து உரையாடலை ஆரம்பித்தமைக்கு நன்றி. இக்கட்டுரையின் உள்ளடக்கமானது போர் எனும் கண்ணோட்டத்தில் எழுதப்படவில்லை என்பதனை குறிப்பிட விரும்புகிறேன். இந்தியா எடுத்த படை நடவடிக்கைக்கு எதிராக பாக்கித்தானும் படை நடவடிக்கையை எடுத்திருப்பதால், மோதல்கள் (strikes) என்றே ஆங்கில விக்கிப்பீடியாவில் தலைப்பிட்டுள்ளார்கள். கட்டுரையின் உள்ளடக்கத்தில் நடுநிலைமை இருப்பதோடு, தலைப்பிலும் நடுநிலைமை இருக்கவேண்டும் என்பதற்காகவே 'சிந்தூர் நடவடிக்கை' என்பதாக நாம் தலைப்பிடவில்லை. அத்தோடு, ஆங்கில விக்கிப்பீடியாவில் 2025 India–Pakistan conflict என தலைப்பை நகர்த்துவதற்கான கலந்துரையாடலும் நடந்துவருவதை நீங்கள் பார்க்கலாம். உலகம் முழுவதும் பல்வேறு நாட்டவரும் பங்களிக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இறுதியாகும் தலைப்பிற்காக நாம் காத்திருக்கலாம் என்பது எனது கருத்தாகும். அதே வேளையில், சிந்தூர் நடவடிக்கை எனும் தலைப்பில் வழிமாற்றுப் பக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதனை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:00, 8 மே 2025 (UTC)[பதிலளி]
- இந்தியா எடுத்த படை நடவடிக்கைக்கு 'சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதன் காரணத்தை கட்டுரையில் சேர்க்கலாம். (ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இவ்வாறு குறிப்பு இட்டுள்ளார்கள்: Sindoor is a reddish pigment used by Hindu women on their foreheads to indicate their married status. This was allegedly due to Hindu men being selectively targeted in the earlier Pahalgam attack, leaving their wives widowed.) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 8 மே 2025 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிப்பீடியாவில் 2025 India–Pakistan conflict என்பதாக தலைப்பை நகர்த்தியிருக்கிறார்கள். எனவே, 2025 இந்தியா-பாக்கித்தான் முரண்பாடு என்பதாக தமிழ் விக்கிப்பீடியாவில் தலைப்பினை மாற்ற பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:04, 10 மே 2025 (UTC)[பதிலளி]
மாற்றுக் கருத்து ஏதும் பதிவாகாத நிலையில், இந்திய-பாக்கித்தானிய போர்களும் முரண்பாடுகளும் எனும் கட்டுரைத் தலைப்பின் அடிப்படையில், இந்தக் கட்டுரையின் தலைப்பை நகர்த்தியிருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 11 மே 2025 (UTC)[பதிலளி]