இந்திய-பாக்கித்தானிய போர்களும் முரண்பாடுகளும்1947 இல் இந்தியப் பிரிப்பினைத் தொடர்ந்து இந்தியாவும் பாக்கித்தானும் நான்கு போர்களில் ஈடுபட்டதோடு, ஒரு அறிவிக்கப்படாத போர், பல எல்லைச் சண்டைகள், இராணுவ விலக்கிச் செல்லல்கள் என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளன. காசுமீர் பிரச்சினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முக்கியக் காரணியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லாப் பெரிய முரண்பாடுகளிலும் இருந்து வருகின்றது. அதில் 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் காசுமீர் பிரச்சினையுடன் தொடர்புபடவில்லை. பின்னணிஇரண்டாம் உலகப் போரின் விளைவாக படைக்கலைப்புச் செய்ததினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை ஈடுகொடுக்க பெரிய பிரித்தானியாவும் பிரித்தானிய இந்தியாவும் ஈடுபட்டபோது இந்தியப் பிரிப்பு ஏற்பட்டது.[1] பிரித்தானிய இந்தியாவிலிருந்து விடுதலை கிடைக்கும்போது சுதந்திரமான, சமமான "பாக்கிஸ்தான்", "இந்துஸ்தான்" என்பனவற்றுக்கான தெளிவான பிரிப்பு ஒன்றை அடைவது முசுலிம் நாட்டுக்கான விருப்பத்தினைக் கொண்டிருந்தவர்களின் நோக்கமாகவிருந்தது.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia