பேரன்பு (தொலைக்காட்சித் தொடர்)
பேரன்பு என்பது 13 டிசம்பர் 2021 அன்று ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப செய்யப்பட்டு, தற்போது திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் ஷமிதா ஸ்ரீகுமார், விமல் வெங்கடேசன், அக்ஷிதா அசோக்[2] ஆகியோருடன் வைஷ்ணவி அருள்மொழி கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.[3][4] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 11 நவம்பர் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 597 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைச் சுருக்கம்ராஜ ராஜேஸ்வரி, தனது வருங்கால மருமகள் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், எனவே ஆர்த்தியை (வானதியின் தங்கை) நிராகரித்து வானதியை கார்த்திக்கிற்கு மனைவியாக தேர்வு செய்கிறார்.[5] வானதிக்கு கார்த்திக்கை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு ராஜேஸ்வரி, புதுமணத் தம்பதிகளுக்கு இடையே உள்ள மாறுபட்ட குணாதிசயங்களால் ஏற்படும் அசௌகரியத்தை உணர்ந்து, தம்பதியரை சேர்த்து வைக்க உதவுகிறார்.[6] நடிகர்கள்
நடிகர்களின் தேர்வுநாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நாயகனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷ்ணவி. பேரன்பு என்னும் சீரியல் மூலம் ஜீ தமிழில் நாயகியாக அறிமுகமானார். நாயகனாக விமல் வெங்கடேசன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் 'ஊர் வம்பு' லட்சுமி, அக்ஷிதா அசோக், 'மெளன ராகம்' சீரியலில் வில்லியாக மிரட்டிய ஷமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.[7] மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia