பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா
பேர்வேக்சு கவுண்டி என்பது வர்சீனியா மாநிலத்தில் உள்ளது. வடக்கு வர்சீனியாவில் உள்ள இதன் எல்லையில் அலெக்சாண்டிரியா நகரமும் ஆர்லிங்டன் கவுண்டியும் உள்ளன. இவை வாசிங்டன் டிசியின் புறநகர் பகுதிகளாக உள்ளன. பொதுவாக புறநகர் அமைப்பை கொண்டுள்ள இக்கவுண்டியில் பல நகர்புறங்களும் புறநகரங்களும் உள்ளன. 2010ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி இதன் மக்கள் தொகை 1,081,726 ஆகும். [1] 2019இல் மக்கள் தொகை 1,147,532 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது, [2]வர்சீனியாவின் மக்கள் தொகையில் 13% மக்கள் இங்கு வசிக்கின்றனர், மக்கள் தொகை அடிப்படையில் இதுவே வர்சீனியாவின் பெரிய நிர்வாக அலகாகும். அதுபோலவை பெருநகர வாசிங்டனில் இதுவே பெரியதாகும். இக்கவுண்டியின் தலைநகராக பேர்வேக்சு நகரம் விளங்குகிறது, ஆனாலும் பேர்வேக்சு நகரம் இக்கவுண்டியின் பகுதி அல்ல. பேர்வேக்சு நகரம் வர்சீனியா சட்டப்படி தன்னாச்சி பெற்ற தனி நகராகும். [3] சராசரி குடும்ப வருவாய் 100,000 வெள்ளிகள் என்ற இலக்கை அடைந்த முதல் கவுண்டி இதுவாகும். அமெரிக்காவிலேயே அதிக வருவாய் பெரும் கவுண்டிகளில் இது இரண்டாவது இடமடைந்துள்ளது, அருகிலுள்ள லௌவுடன் கவுண்டி முதல் இடம். [4] [5] அமெரிக்காவின் பல உளவு நிறுவனங்கள் இங்கு உள்ளன. நடுவண் ஒற்று முகமை, தேசிய வேவு அலுவலகம், தேசிய பயங்கரவாத முறியடிப்பு மையம், தேசிய ஒற்று அமைப்பின் இயக்குநரின் அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ள வகைகளில் முதன்மையானவை. இக்கவுண்டியின் பால்சு சர்ச்சில் ஏழு பார்ச்சூன் 500 நிறுவனங்கள் அமைந்துள்ளன. பால்சு சர்ச்சு தன்னாட்சி நகராட்சி ஆகும்.. [6] வரலாறு![]() ![]() ஐரோப்பியர்கள் இங்கு வந்த காலங்களில் அல்கோனியன் பேசும் டோக் என்ற குழுவனர் இங்கு வசித்து வந்தனர். பேர்வேக்சு கவுண்டியில் உள்ள பொட்டாமாக் ஆற்றங்கரையின் தென் பகுதியில் அவர்களின் சில சிற்றூர்களை கேப்டன் யான் சிமித் என்பவர் 1608ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளார். [7] 670இல் வர்சீனியா காலணிவாதிகளால் டோக் மக்கள் வடகழுத்து மூவலந்தீவு பகுதியிலிருந்து மேரிலாந்து நோக்கி துரத்தப்பட்டனர். 1742ஆம் ஆண்டு பிரின்சு வில்லியம் கவுண்டியின் வடபகுதியை பிரித்து உருவாக்கப்பட்டது. வடகழுத்து மூவலந்தீவு பகுதியின் உரிமையாளரான கேமரூனின் பேர்பாக்சின்(1693-1781) 6-வது பிரபுவான தாமசு பேர்வேக்சு நினைவாக பேர்வேக்சு என்ற பெயர் சூட்டப்பட்டது. [8] பேர்வேக்சு என்ற குடும்ப பெயர் பொன்நிற முடி என்ற ஆங்கில பதத்திலிருந்து மருவி வந்ததாகும். இக்கவுண்டியின் முதல் குடியிறுப்புகள் பொட்டாமாக் ஆற்றின் கரையிலேயே அமைந்திருந்தன. அமெரிக்காவின் முதல் அதிபர் வாசிங்டனின் இல்லமான மவுண்ட் வெர்னான் ஆற்றை பார்த்தபடி இருந்தது அதற்கு அருகிலேயே கன்சுடன் அறை என்ற இச்சார்ச் மேசனின் இல்லம் அமைந்திருந்தது. தற்காலத்திய பெல்வோய்ர் கோட்டையின் சிறு பகுதி பெல்வோய்ர் மெனாரென்ற பண்ணை நிலத்தில் 1741இல் வில்லியம் பேர்பாக்சால் கட்டப்பட்டது. காலணி நாட்டில் வசித்த பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒரே ஆள் கேமரூனின் பேர்பாக்சின் 6-வது பிரபுவான தாமசு பேர்வேக்சு ஆவார். பின்னாளில் அவர் பெல்வோய்ரை விட்டு செனடோ பள்ளத்தாக்குக்கு குடிபெயர்ந்தார். பெல்வோய்ர் குடியிருப்பும் அதை ஒட்டியிருந்த கட்டடங்களும் அமெரிக்க புரட்சிப் போருக்கு பின் தீக்கரையாகி அழிந்தன. ![]() 1757இல் பேர்வேக்சு கவுண்டியின் வடமேற்கில் மூன்றில் இரண்டு பகுதி பிரிக்கப்பட்டு லௌடன் கவுண்டி உருவாக்கப்பட்டது. 1789இல் கவுண்டியின் சில பகுதிகள் நடுவண் அரசுக்கு அலெக்சாண்டிரியா கவுண்டி அமைக்க வழங்கப்பட்டன. 1846இல் அலெக்சாண்டிரியா கவுண்டி வர்சீனியாவுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. அலெக்சாண்டிரியா கவுண்டியானது ஆர்லிங்டன் கவுண்டியாகவும் அலெக்சாண்டிரியா நகரமாகவும் பிரிக்கப்பட்டது. தன்னாட்சி நகரமாக அலெக்சாண்டிரியா 1870இல் உருவானது. அலெக்சாண்டிரியா கவுண்டியின் மற்ற பகுதிகள் ஆர்லிங்டன் கவுண்டியாக 1920இல் பெயர் மாற்றம் பெற்றது. பேர்வேக்சு கவுண்டியின் பால்சு சர்ச் நகரம் 1948இல் தன்னாட்சி நகராக உருவெடுத்தது.[10] பேர்வேக்சு கவுண்டியின் பேர்வேக்சு நகரம் 1961இல் தன்னாட்சி நகராக மாறியது.[11] பேர்வேக்சு கவுண்டிக்கும் பிரிண்சு வில்லியம் கவுண்டிக்கும் இடையே மெனசாசு என்னும் நகர் அருகே 1861 யூலை, புல் ரன் என்னுமிடத்தில் அமெரிக்க உள்நாட்டு போர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளுக்கும் இடையே நடந்தது. அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனுக்கு அருகே உள்ளதால் பேர்வேக்சு கவுண்டி அமெரிக்க உள்நாட்டு போரில் முதன்மையான இடத்தைப் பிடித்தது. சில நாட்கள் கழித்து நடைபெற்ற சாண்ட்டிலி சண்டை புல் ரன் சண்டையின் தொடர்ச்சியாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின் நடுவண் அரசு வளர்ச்சிபெற்ற போது பேர்வேக்சு கவுண்டி அதிக வளர்ச்சியை அடைந்தது அவ்வளர்ச்சி இதனை அதிக புறநகர் உள்ள கவுண்டியாக மாற்றியது. டைசன் கார்னர் மையமானது டைசன் கார்னர் பகுதியின் வளர்ச்சியை அதிகமாக்கியது. இக்கவுண்டியில் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை அமைத்தனர். கணினி நுட்ப வளர்ச்சி பொருளாதாரமும் சீராக நடுவண் அரசு தொடர்பான பொருளாதாரமும் இக்கவுண்டியின் பொருளாதாரம் வளர உதவிதோடு பல இன மக்கள் இங்கு வசிப்பதற்கும் உதவியது. இப்பொருளாதாரத்தால் இது நாட்டின் பணக்கார கவுண்டியாக ஆகியது. [12] பைஞ்சுதையால் வேவப்படாத 2650 அடி ஓடு தளத்தை கொண்டிருந்த பொது வான் போக்குவரத்து வானூர்தி நிலையம் சாலை எண் 50இக்கு மேற்கே செவன் கார்னர் என்னுமிடத்தில் 1948 முதல் 1960 வரை இயங்கியது. இதை பலதரப்பட்ட தனியார் வானோடிகள் பயன்படுத்தி வந்தனர்.. வீடுகள் அதிகம் கட்டப்பட்டதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதாலும் மக்கள் பயன்பாட்டு இடம் வேண்டுமென்ற கோரிக்கைகளாலும் 1960இல் இது மூடப்பட்டது.[13][14][15] நில விளக்கப்படம்அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுக்கு அமைப்பின் படி இக் கவுண்டியின் மொத்த பரப்பளவு 406 சதுர மைல்கள் அதில் 309 சதுர மைல்கள் நிலம்.[16] இக்கவுண்டியின் வடக்கிலும் தென்கிழக்கிலும் பொட்டாமக் ஆறு எல்லையாக உள்ளது. வடகிழக்கில் வாசிங்டன் எல்லையாக உள்ளது. வடக்கே ஆற்றுக்கு மறுகரையில் மேரிலாந்தின் மாங்குமேரி கவுண்டியும் தென்கிழக்கில் பிரின்சு யோர்ச் கவுண்டியும் சார்லசு கவுண்டியும் உள்ளன. ஆர்லிங்டன் கவுண்டி இதால் சூழப்பட்டுள்ளது. கிழக்கில் அலெக்சாண்டிரியா தன்னாட்சி நகரமும் பால்சு சர்ச் நகரமும் உள்ளன. இதன் மேற்கே லௌடன் கவுண்டியும் தெற்கே பிரின்சு வில்லியம் கவுண்டியும் உள்ளன. பெரும்பாலான கவுண்டி மலைச்சரிவுகளிலும் ’டிபிகல்ட் ரன்’ போன்ற ஆழமான ஓடைகளும் உள்ள பள்ளத்தாக்கான அமெரிக்க பிட்மென்ட் பகுதியில் அமைந்துள்ளது. பிட்மென்ட் பகுதி என்பது தென்நியூயார்க்கிலிருந்து அலபாமா வரை அமெரிக்க கிழக்கில் அப்பலாச்சியன் மலைத்தொடருக்கு கிழக்கே அமைந்துள்ளது. வர்சீனியா சாலை எண் 28இக்கு மேற்கே பிட்மெண்ட் பகுதி பள்ளத்தாக்கு சமதளமாக லௌடன் கவுண்ட்டியிலுள்ள புல் ரன் மலை வரை உள்ளது. டைசன்சு கார்னர் பகுதியில் இது கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரமுடையது. நிலவியல்கவுண்டியின் நடுவிலுள்ள பிட்மாண்ட் மலை பழங்கால மேட்மோர்பிக் பாறைகளால் ஆனது. அப்பலாச்சியன் மலைத்தொடரின் சில பகுதிகள் வேட்மோர்பிக் பாறைகளால் ஆனது ஆகும். மேற்கு பள்ளத்தாக்கு களிப்பாறைகளாலும் மணற்கல்களாலும் ஆனது.இதன் நிலவியல் அப்பலாச்சியன் மலைத்தொடருக்கு அருகிலுள்ள மேரிலாந்து, தென் வர்சீனியா ஒப்பாக உள்ளது. 11 சதுர மைல் பரப்புக்கு இயற்கையான கல்நார் நிலத்துக்கடியில் உள்ளது.[17] பெரும்பாலான கல்நார் மேட்மோர்பிக் தன்மையுடைய பாறைகள் ஆகும். 1987 லேயே இந்த ஆபத்து கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கட்டுமான இடத்தின் காற்றின் தூய்மையை அளவிடவும் பாதிக்கப்பட்ட மண் உள்ள நிலத்தை கட்டுப்படுத்தவும் புதிதாக உருவாகும் கட்டடங்களின் அடியில் மேல் மண்ணில் 6 அங்குலத்துக்கு தூய்மையான மண்ணை இடவேண்டுமெனவும் சட்டமியற்றியது. [18][19] சென்டர்வில் உயர்நிலைப்பள்ளி கட்டும்போது கல்நார் கலந்த மண் கிடைத்தது. அந்த மண் அகற்றப்பட்டு தூய்மையான மண் நிரப்பப்பட்டது. ஒருவகை களிமண் கவுண்டியில் பல்மாநில சாலை எண் 95 கிழக்கு பகுதியில் அதிகம் உள்ளது. குறிப்பாக லீ, மவுண்ட் வெர்னான் மாவட்டங்களில் அதிகமுள்ளது. இந்த வகை களிமண் மண்ணின் தன்மை உறுதியில்லாமல் இருப்பது கட்டுமானத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.[20] அரசும் அரசியலும்நகர கவுண்டி செயல் வடிவத்தில் இக்கவுண்டியின் அரசு செயல்படுகிறது. 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற கருத்தெடுப்பின் முறையில் நகர கவுண்டி செயல் வடிவ முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. [21][22] இம்முறையின் கீழ் பத்து உறுப்பினர்கள் கவுண்டியின் அன்றாட செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்கள். இதில் ஒன்பது உறுப்பினர்கள் ஒற்றை உறுப்பினர் மாவட்டங்களான பிராட்டாக், டிரான்சுவில், கன்டர் மில், லீ, மேசன், மவுன்ட் வெர்னான், புராவிடன்சு, இசுபிரிங் பீல்ட், சல்லி போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன் தலைவரான பத்தாவது உறுப்பினர் கவுண்டி அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 10 உறுப்பினர் மேற்பார்வையாளர்கள் குழு உறுப்பினர்கள் தவிர அரசிலமைப்பின் படி காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அலுவலர், கவுண்டியின் செரிப் எனப்படும் காவல்துறை தலைவர் ஆகிய மூன்று அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது தவிர பன்னிரண்டு உறுப்பினர்களை உடைய கவுண்டி பொதுப்பள்ளி வாரியம் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பேர்வேக்சு கவுண்டி அரசாங்க மையம் பேர்வேக்சு நகரின் மேற்கே நகரின் நிருவாகத்திற்கு உட்படாத இடத்தில் அமைந்துள்ளது. [23] பேர்வேக்சு கவுண்டியின் சிறை நீதிமன்றம் போன்ற பல அலுவலகங்கள் அடங்கிய தனி பகுதி பேர்வேக்சு நகரின் மையத்தில் அந்நகரின் நிருவாகத்திற்கு உட்படாத இடத்தில் அமைந்துள்ளது. [24][25] பேர்வேக்சு கவுண்டி முன்பு குடியரசு கட்சியின் செல்வாக்கும் ஆதரவாளர்களும் அதிகம் இருந்தாக இருந்தது. எனினும் 1995 இக்கு பின் மக்களாட்சிக் கட்சி செல்வாக்கை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. மேற்பார்வையாளர்கள் குழுவையும் (வாரியம்) பள்ளி வாரியத்தையும் (சட்டப்படி கட்சிசார்பற்றது) செரிப் பதவியையும் காமன்வெல்த் கவுண்டி வழக்கறினர் பதவியையும் கவுண்டியின் அனைத்து வர்சீயா கீழவை பதவியையும் மக்களாட்சிக் கட்சியினர் கைப்பற்றியுள்ளார்கள். மூன்று கீழவை தொகுதிகள் இக்கவுண்டியுடன் இணைந்தவை. அமெரிக்க கீழவை தொகுதிகள் எண்களால் குறிப்பிடப்படும் எனவே இதை சார்ந்த தொகுதிகள் எட்டாவது பத்தாவது பதினொன்றாவது என்று குறிக்கப்படுகின்றன. மூன்று தொகுதிகளிலும் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர். வாசிங்டன் டி. சி.க்கு அண்மையில் உள்ள பகுதிகளில் மற்ற பகுதிகளை விட அதிகமாக மக்களாட்சிக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம். 2000, 2001, 2005 ஆண்டுகளிள் இக்கவுண்டி மக்களாட்சிக் கட்சி வேட்பாளர்களையே வர்சீனியா மேலவைக்கும் ஆளுநருக்கும் ஆதரித்தது. 2004 ஐக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் சான் கெர்ரி இக்கவுண்டியில் 53% வாக்குகள் பெற்றார். லின்டன் சான்சனுக்கு பின் இக்கவுண்டியில் வெற்றி பெற்ற முதல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் சான் கெர்ரி ஆவார். 2005ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் ஆளுநர் வேட்பாளர் டிம் கெய்ன் 60% இக்கு அதிகமான வாக்குகளை இங்கு பெற்றார் இது அவர் மாநில அளவில் 51.7% பெற்று வெற்றி பெற உதவியது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க செனட்டர் தேர்தலில் வர்சீனியாவில் வென்ற மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் யிம் வெப் 58.9% வாக்குகளை இங்கு பெற்றார். 2007 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர்கள் மாநில அளவில் ஒரு கீழவை தொகுதியையும் இரண்டு மேலவை தொகுதிகளையும் கைப்பற்றினர். உள்ளூர் அளவில் ஓர் பேர்வேக்சு கவுண்டி மேற்பார்வையாளர் உறுப்பினரை பெற்று 8-2 என்ற பெரும்பான்மையை பெற்றனர். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா 60%இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் அதே போன்று அமெரிக்க செனட்டர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் மார்க் வார்னர் 60% இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றனர். மேலும் அமெரிக்க பதினொன்றாம் எண் கீழவை தொகுதியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற குடியரசு கட்சி வேட்பாளர் தாமசு தேவீசிடமிருந்து மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் செர்ரி கானலி (இச்செர்ரி கானலி) கைப்பற்றினார். மேற்பார்வையாளராக இருந்த செர்ரி கானலி 11-ஆம் எண் கீழவை தொகுதியில் வெற்றி பெற்றதால் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பிராட்ராக் மேற்பார்வையாளருக்கான சிறப்பு தேர்தலில் செரோன் புலோவா வென்றார். 1995ஆம் ஆண்டு முதல் அங்கு மக்களாட்சிக் கட்சி வேட்பாளரே வென்று வருகிறார். கென் கூச்சிநால்லி செனட்டராக இருந்த 37ஆம் எண் வர்சீனியா மேலவை தொகுதிக்கு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு செனட் தேர்தலில் தேவீது மார்சுடென் வென்றார்.[26] அந்த தேர்தலுக்கு பின் வர்சீனியா மேலவையை பேர்வேக்சு கவுண்டி சார்பாக அடையாளப்படுத்தியவர்கள் அனைவரும் மக்களாட்சிக் கட்சினர். [27] 2010ஆம் ஆண்டு அமெரிக்க கீழவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதினொன்றாம் எண் தொகுதியை செர்ரி கானலி 981 வாக்குகள் (0.4%) வேறுபாட்டிலேயே தக்க வைக்க முடிந்தது. சிம் மோரானும் பிராங் வூல்ப்புமும் தோராயமாக 30% வாக்கு வேறுபாட்டில் வென்றார்கள். 2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா 59.6% வாக்குகளையும் அமெரிக்க மேலவைக்கு போட்டியிட்ட முன்னால் ஆளுநர் டிம் கெய்ன் 61% வாக்குகளையும் பெற்றனர். கீழவைக்கு நடந்த தேர்தலில் கானலி, மோரான், குடியரசு கட்சியின் வூல்ப் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக்கொண்டனர். 2009ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் ஆளுநர் பாப் மெக்டான்னல் இக்கவுண்டியில் 51% வாக்குகளை பெற்ற போதும் குடியரசு கட்சியின் எழுச்சி நிலைக்க்வில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடுத்த ஆண்டு ஆளுநர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் டெர்ரி மெக்காலிப் இக்கவுண்டியில் 58% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். டெர்ரி்யை எதிர்த்த குடியரசு கட்சி வேட்பாளர் இக்கவுண்டியின் ஆள் அப்போதைய மாநில தலைமை வழக்கறிஞரும் முன்னாள் பேர்வேக்சு கவுண்டியின் செனட்டருமான கென் கூச்சிநால்லி. ஆளநருடன் மக்களாட்சிக் கட்சி சார்பாக போட்டியிட்ட துணைநிலை ஆளுநரும், தலைமை வழக்கறிஞரும் இக்கவுண்டியில் வென்றனர். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பு வெற்றிபெற்றாலும் இங்கு இலரி கிளின்டன் 64.4% வாக்குகளை பெற்றார். மக்கள் தொகையியல்
2010ஆம் ஆண்டு கணக்கின் படி 1,081,726 மக்களும், 350,714 குடியிருப்புகளும் 250,409 குடும்பங்களும் இக்கவுண்டியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது,. சதுர மைலுக்கு 2,445 மக்கள் வசிக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் 350,714 குடியிருப்புகள் இருந்தன இதில் 36.06% பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள், 59.40% பேர் இணைந்து வாழும் திருமணமானவர்கள், 8.60% குடியிருப்புகளில் கணவர் இல்லாமல் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர், 28.60% பேர் குடும்பங்கள் அல்லாதவர்கள். 21.40% பேர் தனியாக குடியிருப்புகளில் வசிப்பவர்கள், 4.80% அதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். சராசரியாக ஓர் குடியிருப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74, ஓர் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.20. கவுண்டியில் உள்ளவர்களின் சராசரி வயது 36 ஆண்டுகள். 100பெண்களுக்கு 98.60 ஆண்கள் இருந்தனர். 2007ஆம் ஆண்டில் குடியிருப்பில் உள்ளவர்களின் ஆண்டு சராசரி வருமானம் 102,460 வெள்ளிகள் என்றும் ஓர் குடும்பத்தின் ஆண்டு சராசரி வருமானம் 120,804 வெள்ளிகள் என்றும் கணிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்களின் சராசரி வருமானம் 60,503 வெள்ளிகள், பெண்களின் சராசரி வருமானம் 41,802 வெள்ளிகள் ஆகும். கவுண்டியில் உள்ளவர்களில் ஓர் ஆளின் சராசரி வருமானம் 36,888 வெள்ளிகள் ஆகும். கவுண்டியில் உள்ளவர்களில் 4.5% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். [5] குடியிருப்பில் உள்ளவர்களின் சராசரி வருமானத்தைப் பொருத்தளவில் இக்கவுண்டி அமெரிக்காவில் அதிக வருமானம் பெறக்கூடியதாக இருந்தது. 2000ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கொலாராடோவின் டக்ளசு கவுண்டி இதை விட அதிக சராசரி வருமானம் பெறுவதாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,610 வெள்ளி வருமானம் பெற்ற இதன் அருகிலுள்ள லௌடன் கவுண்டி முதலாவது இடத்திலும் பேர்வேக்சு இரண்டாவது இடத்திலும் இருந்தன. 2007ஆம் ஆண்டு பேர்வேக்சு மீண்டும் முதலிடத்தைப் பிடித்ததோடு 100,000 வெள்ளிகளுக்கு மேல் வருமானம் பெற்ற முதல் கவுண்டி என்ற சிறப்பை அடைந்தது. [28] 2008ஆம் ஆண்டு லௌடன் மீண்டும் முதலிடத்தை அடைந்தது பேர்வேக்கசு இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்நிலையே இன்றளவும் தொடர்கிறது..[29][30] 2012ஆம் ஆண்டு குடியிருப்பில் உள்ளவர்களின் சராசரி வருமானம் $108,439 ஆக உயர்ந்தது.[31] கல்விபேர்வேக்சு கவுண்டி பொதுப் பள்ளிகள் என்ற வாரியத்தின் மூலம் இக்கவுண்டியின் பள்ளிகள் நிருவகிக்கப்படுகின்றன. கவுண்டியின் நிதிநிலையில் 52% இப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. [32] மாநில அரசும் நடுவண் அரசும் நிறுவனங்களும் தனி ஆள்கள் கொடுத்த பணமும் இதில் அடக்கம்,2008ஆம் ஆண்டு எல்லா வகை பணமும் சேர்த்து பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2.2 பில்லியன் வெள்ளிகள்.[33] 2008ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி ஓர் மாணவருக்கு 13,407 வெள்ளிகள் செலவிடப்பட்டதாக கணிக்கப்பட்டது.[34] வர்சீனியா ஆளுநரின் அறிவியலுக்கும் நுட்பத்துக்குமான தாமசு செப்பர்சன் உயர் நிலைப்பள்ளியும் பேர்வேக்சு கவுண்டி பள்ளி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இப்பள்ளி அமெரிக்காவின் தலை சிறந்த பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது. பேர்வேக்சு கவுண்டி மாணவர்கள் மட்டுமின்றி அருகிலுள்ள லௌடன், ஆர்லிங்டன், பிரின்சு வில்லியம், வேஃக்குயர் கவுண்டி மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக துவக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளியும் இக்கவுண்டியில் உள்ளன, ஆனால் அவை ஆர்லிங்டன் மறைமாவட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்றன. மெக்லினிலுள்ள ஓக்கிரிசுட் பள்ளி ஆர்லிங்டன் மறைமாவட்டத்தின் கீழ் வராது ஆனால் பேர்வேக்சு கவுண்டியின் ஆறாம் பவுல் உயர்நிலைப் பள்ளி மறைமாவட்டத்தின் கீழ் வரும் இச்சார்ச் மேசன் பல்கலைக்கழகம் பேர்வேக்சு நகரத்துக்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வட வர்சீனியா சமுதாய கல்லூரியின் வளாகங்கள் இக்கவுண்டியின் அன்னடேல், இசுபிரிங்பீல்ட் என்று இரு இடத்திலும் அமைந்துள்ளது. இக்கவுண்டியின் ரெசுட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ள வட வர்சீனியா சமுதாய கல்லூரியின் மையம் லௌடன் கவுண்டிக்கும் சேவை வழங்குகிறது. வட வர்சீனியா சமுதாய கல்லூரி இக்கவுண்டியின் எல்லையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரிலும் உள்ளது. பேர்வேக்சு பல்கலைக்கழகம் என்பது இக்கவுண்டியிலுள்ள வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. வர்சீனியா காமன்வெல்த் கல்லூரியின் மருத்துவப்பிரிவு ஐனோவா பேர்வேக்சு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்களை பயிற்றுவிக்கிறது. [35] பொருளாதாரம்இக்கவுண்டியின் பொருளாதாரம் சேவைத்துறையையும் தொழில்நுட்பத்தையும் பெரிதும் சார்ந்துள்ளது. இங்குள்ள பல மக்கள் அரசாங்கத்திடமோ நடுவண் அரசின் ஒப்பந்ததாரர்களிடமோ பணியாற்றுகிறார்கள். இங்குள்ள மக்களில் அதிகமானோர் வேலை செய்வது அரசிடமே. தென் பேர்வேக்சிலுள்ள போர்ட் பெல்வோய்ர் என்னும் இடமே நாட்டிலேயே அதிகளவான நடுவண் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் இடமாகும். இக்கவுண்டியின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக பேர்வேக்சு கவுண்டி பொருளாதார மேம்பாட்டு கழகம் உள்ளது. பேர்வேக்சு கவுண்டி பொருளாதார மேம்பாட்டு கழகமே மாநில அரசு சாராமல் உள்ளதில் நாட்டிலேயே பெரிய பொருளாதார மேம்பாட்டு கழகமாகும். இக்கவுண்டியில் உள்ள வட வர்சீனியா தொழில்நுட்ப ஆணையம் என்பது உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிக கூட்டமைப்பாகும். இக்கவுண்டியிலுள்ள டைசன்சு கார்னர் வர்சீனியாவிலேயே அதிகளவு (26,600,000 சதுர மீட்டர்)அலுவலக இடங்களை கொண்டுள்ள இடமாகும்.[36][37] டைசன்சு கார்னர் அடிக்கடி போர்ப்சு இதழால் இணையம் உருவான பகுதி என்று குறிப்பிடப்பட்டது. தற்போது பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் இங்கு அதிகளவில் உள்ளன.[38] வாரநாட்களில் வேலைக்கு 100,000 வேலையாட்கள் டைசன்னின் சுற்றுவட்டாரத்திலிருந்து டைசனுக்கு பணிக்கு வருகிறார்கள். வாரநாட்களில் 55,000 நுகர்வோர் டைசனுக்கு வருகின்றனர். ஒப்பீட்டு அளவில் வாரநாட்களில் வாசிங்டன் டி.சி. இக்கு 65,000 நுகர்வோர் வருகின்றனர். டல்லசு பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வாசிங்டன் டி.சிக்கு செல்லும் வெள்ளி நிற மெட்ரோ தடம் டைசன்சு வழியாக செல்கிறது. இத்தடத்தில் நான்கு நிலையங்கள் டைசன்சு கார்னரில் உள்ளது. பணியாட்களை பணி செய்யும் இடத்திற்கு அருகே வசிக்க வசதி ஏற்படுத்த நகரமையமாக்கல் திட்டத்தை செயல்படுத்தும் பேர்வேக்சு கவுண்டி, டைசனின் குடியிறுப்புகளை மூன்று மடங்கு அதிகமாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிலையங்களின் 0.50 மைல் தொலைவுக்குள்ளயே மிகப்பெரும்பாலான புதிய குடியிறுப்புகளை நிறுவதும் கவுண்டியின் திட்டம்.[39] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia