பைகி நடனம்பைகி நடனம் (Paiki dance) பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சார்க்கண்டு, சத்தீசுகர் மற்றும் ஒடிசாவின் சோட்டானக்பூர் பீடபூமி பகுதியின் சதானி நாக்புரி தற்காப்பு நாட்டுப்புற நடனம் ஆகும்.[1][2][3][4] இந்நடனத்தின் போது, மக்கள் வேட்டி, மயில் இறகுகள் கொண்ட தலைப்பாகை அணிவார்கள். இவர்கள் வலது கையில் வாளையும், இடது கையில் கேடயத்தையும் ஏந்தியபடி நாகரா, தக், செனாய் மற்றும் நரசிங்கின் இசைக்கருவிகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள்.[3][5] இதில் ஆண்களே நடனமாடுவார்கள். இதில் ஆண்களின் வீரம் பிரதிபலிக்கிறது. பைகி நடனம் திருமணம் மற்றும் பிற விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.[6][7] இடைக்காலத்தில் பாய்க் என்பது இடைக்காலத்தில் தரைப்படை வீரர்களைக் குறித்தது.[5][6] இந்நடனம் முதன்மையாக சோட்டா நாக்பூரில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியின் போது தரைப்படை வீரர்களாக இருந்த ரௌதியாக்களால் நிகழ்த்தப்பட்டது.[1] இது குந்தி மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சில முண்டா பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது.[8][9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia