பைரோகந்தக அமிலம்
பைரோகந்தக அமிலம் (Pyrosulfuric acid) என்பது கந்தகத்தின் ஓர் ஆக்சியமிலமாகும்.[1] இதை இருகந்தக அமிலம் என்றும் ஒலீயம் என்றும் அழைப்பார்கள். ஒலீயம் எனப்படும் புகையும் கந்தக அமிலத்தின் பெரும் அங்கம் இருகந்தக அமிலமே என்று பெரும்பாலான வேதியியலாளர்கள் உடன்படுகிறார்கள். வேதிச்சமநிலை காரணமாக திரவ நீரிலி கந்தக அமிலத்தின் ஒரு சிறிய அங்கமாகவும் இருகந்தக அமிலம் உள்ளது.
மிகையளவு கந்தக டிரையாக்சைடை (SO3) கந்தக அமிலத்துடன் வினைபுரியச் செய்து பைரோகந்தக அமிலம் தயாரிக்கப்படுகிறது. பைரோகந்தக அமிலத்தை ஓர் அமில நீரிலியின் கந்த அமிலம் ஒத்த வரிசை என்று காணலாம். ஒவ்வொரு கந்தக அமில அலகும் அதன் அருகாமை அலகுகளின் பரசுபர எலக்ட்ரான்-திரும்பப் பெறுதல் விளைவு காரணமாக அமிலத்தன்மையின் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்புக்கு காரணமாகின்றன. கந்தக அமிலக் கரைப்பான் அமைப்பில் சாதாரண கந்தக அமிலத்தை புரோட்டானேற்றம் செய்ய போதுமான வலிமையை இருகந்தக அமிலம் கொண்டுள்ளது. பொதுவாக பைரோகந்தக அமிலத்தின் உப்புகள் பைரோசல்பேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. பொட்டாசியம் பைரோசல்பேட்டு இதற்கு உதாரணமாகும். H2O • (SO3) x என்ற பொது வாய்ப்பாட்டுடன் பிற தொடர்புடைய அமிலங்கள் அறியப்படாலும் அவை எதுவும் தனிமைப்படுத்தப்படவில்லை. இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia