பொசுனியாவும் எர்செகோவினாவும் தேசிய காற்பந்து அணி
பொசுனியா எர்செகோவினா தேசிய கால்பந்து அணி (Bosnia and Herzegovina national football team; Bosnian/Croatian/Serbian: Nogometna/Fudbalska reprezentacija Bosne i Hercegovine; Cyrillic script: Ногометна/Фудбалска репрезентација Боснe и Херцеговинe) ), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பொசுனியா எர்செகோவினா நாட்டின் சார்பாக பங்கேற்கும் அணியாகும். இதனை, பொசுனியா எர்செகோவினா கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. பொசுனியா எர்செகோவினா அணி 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது; சுதந்திர நாடான பிறகு பங்கேற்கும் முதல் முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டுப் போட்டித்தொடராகும்.[1][2] இதற்கு முன்னரும் சில தடவைகள், முக்கியப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் நிலையிலிருந்தனர். 2010 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 2012 ஆகியவற்றுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகான, வெல்பவர்-உள்ளே (play-off) போட்டிகளில் போர்த்துக்கேய தேசிய கால்பந்து அணியிடம் தோற்று வெளியேறினர்.[3][4][5][6] இவ்வணியினர், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ஒருமுறைகூட தகுதிபெற்றதில்லை. குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia