நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[2] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.