எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் துறைமுகம் சென்னைத் துறைமுகத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் கோரமண்டல் கரையில் உள்ளது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி முதல் இது காமராஜர் துறைமுகம் என்றழைக்கப்படுகின்றது.[2] இது ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் பன்னிரெண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். அரசுடைமையாக்கப்பட்ட முதல் துறைமுகமும் இதுவே. இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் நடுவண் அரசிடமும், மீதம் 32 சதவிகிதம் சென்னைத் துறைமுகமும் கொண்டுள்ளன. இது 86 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். வரலாறுமார்ச் 1999 இல் இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908 ஆம் கீழ் ஒரு முக்கிய துறைமுக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1999 ல் நிறுவனங்கள் சட்டம் 1956 ன் கீழ் எண்ணூர் போர்ட் லிமிடெட் நிறுவப்பட்டது.தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திற்கு உதவியாக செயல்பட்டு வந்தது. இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் , தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவைக்காக நிலக்கரி போக்குவரத்திற்கு பயன்பட்டது. பின்னாளில் தமிழ்நாடு அரசு மின் திட்டத்திற்காக துறைமுகத்தை விரிவுபடுத்தியது. இடவமைப்பு மற்றும் புவியியல்செயல்பாடுகள்இங்கு ஆறு சரக்கு கையாளும் தளங்கள் உள்ளன. இதன் சரக்குகள் கையாளும் திறன் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் டன் ஆகும். போக்குவரத்துஇரயில் போக்குவரத்துவிஜயவாடாவிலிருந்து சென்னை வரையுள்ள இரயில் பாதையில் அத்திப்பட்டு இரயில் நிலையம் அருகே உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் பார்க்கசான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia