பொதுநலவாயம்காமன்வெல்த் (Commonwealth) ஓர் பொதுவான நல்நோக்கம் கொண்டு நிறுவப்படும் அரசியல் சமூகத்திற்கான வழமையான ஆங்கிலச் சொல்லாகும். இதனை பொதுநலவாயம் எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பல்லாண்டுகளாக இது குடியரசியலுக்கு இணையாக எடுத்தாளப்படுகின்றது. ஆங்கிலேய பெயர்ச்சொல்லான "காமன்வெல்த்" 15ஆம் நூற்றாண்டிலிருந்தே "பொதுநலம்; பொது நன்மை அல்லது பொது ஆகுபயன்" என்ற பொருளிலே விளங்கி வந்துள்ளது. [1] இது இலத்தீனச் சொல்லான ரெஸ் பப்ளிகா என்பதன் மொழிபெயர்ப்பாக வந்துள்ளது. 17ஆவது நூற்றாண்டில் "காமன்வெல்த்" துவக்கத்திலிருந்த "பொதுநலம்" அல்லது "பொதுச் செல்வம்" என்ற பொருளிலிருந்து "பொது மக்களிடம் அரசாண்மை வழங்கப்பட்ட நாடு; குடியரசு அல்லது மக்களாட்சி நாடு" என்பதைக் குறிக்குமாறு விரிவானது.[2] ஆத்திரேலியா, பகாமாசு, டொமினிக்கா ஆகிய மூன்று நாடுகளும் நான்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இரண்டு ஐ.அ. ஆட்புலங்களும் தங்களின் அலுவல்முறைப் பெயரில் பொதுநலவாயம் என்பதை இணைத்துக்கொண்டுள்ளன. அண்மையில், சில இறையாண்மை நாடுகளின் பாசமான இணைவுகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது; குறிப்பிடத்தக்கதாக நாடுகளின் பொதுநலவாயம், பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த முந்தைய நாடுகளின் கூட்டைக் கூறலாம். பல நேரங்களில் இந்தக் கூட்டே சுருக்கமாக "தி காமன்வெல்த்" என ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia