நாடுகளின் பொதுநலவாயம்
நாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Nations) அல்லது பரவலாக பொதுநலவாயம் (காமன்வெல்த்),[1] எனப்படுவது பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆட்பகுதிகளாக இருந்த, 56 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும்.[2] இருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் "கட்டற்றவை மற்றும் சமமானவை" என்று நிறுவப்பட்டது.[3] இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசர் பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 15 உறுப்பினர் நாடுகளில் சார்லசு III நாட்டுத் தலைவர் தகுதியில் அரசர் ஆவார். 36 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது. பொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது..[4] உறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு,வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள்,மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன.[4] இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 3, 2013இல், 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும்.[6] பொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய 29,958,050 km2 (11,566,870 sq mi)க்கும் கூடுதலான நிலப்பரப்பை, உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது; இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும்.[7] 2012இல் பொதுநலவாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது; இது கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும். இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது.[8] வரலாறுதொடக்கம்1959 ஆம் ஆண்டில் டொமினிய நாளில் கனடாவில் உரையாற்றிய ராணி எலிசபெத் II, 1867 ஜூலை 1 ம் தேதி கனடாவின் கூட்டமைப்பு "பிரித்தானிய பேரரசுக்குள்ளான முதல் சுதந்திர நாடு" என்று அவர் அறிவித்தார்: "எனவே, இது சுதந்திர நாடுகளின் சங்கத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. இப்போது இது பொதுநலவாய நாடுகள் என அழைக்கப்படுகிறது.[9] " லார்ட் ரோஸ்பேரி, நீண்ட காலத்திற்குப் பிறகு 1884 ஆம் ஆண்டில், தனது ஆஸ்திரேலியா வருகை தரும் போது பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மாறிக்கொன்டு வருவதாகவும் - அதன் சில காலனிகளில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளது- மேலும் பிரித்தானிய அரசுக்கு ஒரு "நாடுகளின் பொதுநலவாயம்மாக" மாற்றம் பெற்றுவருவதாக கூறினார்.[10] பிரித்தானிய மற்றும் காலனித்துவ பிரதம மந்திரிகளின் மாநாடுகள் முதன்முதலாக 1887 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, இது 1911 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய மாநாடுகள் உருவாக்க வழிவகுத்தது.[11] பொதுநலவாயம் ஏகாதிபத்திய மாநாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜான் ஸ்முட்ஸ் 1917 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் "பாரிஸ் அமைதி மாநாட்டில்" "பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு உறவுகள் மற்றும் சார்பற்ற மாற்றங்களை" பற்றிய தனது தொலைநோக்கு திட்டங்களை முன்மொழிர்தார்.[12][13] 1921 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-ஐரிஷ் உடன்படிக்கை இல் முதன்முதலாக, ஏகாதிபத்திய சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது, மேலும் முதன் முதலாக ஐரிஷ் சுதந்திர அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டபோது பிரித்தானிய இராச்சியம் என்ற வார்த்தைக்கு பதிலாக பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் என்பது பயன்படுத்தப்பட்டது.[14] ஆட்சிப்பகுதிகள்1926 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியநாடுகள் மாநாட்டில், பால்ஃபோர் பிரகடனத்தில், பிரிட்டன் மற்றும் அதன் தலைவர்கள் இவ்வாறு முடிவெடுக்க ஒப்புக்கொண்டனர், அனைத்து உறுப்பு நாடுகளையும் "சமமான நிலையிலும், உள்நாட்டு அல்லது வெளி விவகாரங்களில் எந்தவொரு அம்சத்திலும் தலையடுவதில்லை என்று பிரகடனபடுத்தப்பட்டது. மேலும் பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக இணைந்திருந்தாலும், அரசியலமைப்பின் பொதுவான விசுவாசத்தாலும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றது." உறவு தொடர்பான இந்த அம்சங்கள் 1931 ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் விதி சட்டத்தின் மூலம்,கனடாவின் ஒப்புதல் இல்லாமல், முறையானவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் நடைமுறைக்கு அமர்த்த வேண்டும். நியூஃபவுண்ட்லேண்ட் 16 பெப்ரவரி 16, 1967 இல், அதன் நாடாளுமன்ற ஒப்புதலுடன், நியூஃபவுண்ட்லேண்ட் அரசாங்கத்தை களைத்து தானாக லண்டன் நேரடி கட்டுப்பாட்டிற்கு திரும்பியது. பின்னர் நியூஃபவுண்ட்லேண்ட் 1949 இல் கனடாவின் 10வது மாகாணம்மாக இனைந்தது.[15] ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 1942 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் மற்றும் 1949 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் முறையாக ஒப்புதல் வழ்ங்கியது.[16][17] தென் ஆபிரிக்க ஒன்றியம் வெஸ்ட்மினிஸ்டரின் சட்டத்தை நடைமுறைக்கு எடுக்க வேண்டிய தேவையில்லை என்றாலும், தெற்கு ஆப்பிரிக்காவின் நிலையை ஒரு இறையாண்மை மாநிலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக 1934 ஆம் ஆண்டில் இரண்டு சட்டங்கள் - யூனியன் சட்டத்தின் நிலை, மற்றும் ராயல் எக்ஸிகியூட்டிவ் செயல்பாடுகள் மற்றும் சீல்ஸ் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.[18] காலனியாதிக்கம் குறைப்புஇரண்டாம் உலக போர் முடிவடைந்த பிறகு, பிரித்தானிய பேரரசு படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நாடுகள், பொதுநலவாய பகுதிகள் அல்லது குடியரசுகள், மற்றும் பொதுநலவாய உறுப்பினர்கள் என்று சுதந்திரமான நாடுகளாகிவிட்டன. ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்ட 14 பிரித்தானிய வெளிநாட்டுப் பிரதேசங்கள் உள்ளன. ஏப்ரல் 1949 இல், லண்டன் பிரகடனத்தின் பின்னர், "பிரித்தானிய" என்ற வார்த்தையானது பொதுநலவாயம் என்ற தலைப்பில் மாற்றப்பட்டது.[19] பர்மா (1948 இல் மியான்மர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் போரின் போது பிரித்தானிய காலனிகளாகவும் மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினரில்லாமலும் இருந்தனர். பொறுப்புகள் குறைப்புகுடியரசுகள்புதிய பொதுநலவாயம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia