பொன். சின்னத்தம்பி முருகேசன்

பொன். சின்னத்தம்பி முருகேசன் (பிறப்பு 1960 - மறைவு அக்டோபர் 2, 2024) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையைச் சேர்ந்த இவர் இயற்பியல், கல்வியியல் பட்டம் பெற்றிருக்கிறார். சட்டமும் பயின்றவர். மாவட்டக் கருவூல அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பிரேசில் எழுத்தாளர் பௌலோ கொயல்ஹோவின் புகழ்பெற்ற புதினமான தி அல்கெமிஸ்ட்ஐ தமிழில் ரசவாதி என்ற பெயரிலும், அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹோலியின் டூட்ஸ் என்ற புதினத்தை வேர்கள் என்ற பெயரிலும், ஃபிரிட்ஜோஃப் காப்ராவின் தி டாவோ ஆப் பிசிக்ஸ் எனும் நூலைத் தமிழில் "இயற்பியலின் தாவோ" எனும் பெயரில் மொழிபெயர்த்தார்.[1] இவர் மொழிபெயர்த்த "இயற்பியலின் தாவோ" நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

ஆதாரம்

  1. Writer, Staff (2024-10-03). "மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் மறைவு!". Andhimazhai. Retrieved 2024-10-05.
  • page 253 in “கால மேலாண்மை குறித்து வெற்றியாளர்கள் அறிந்த 15 இரகசியங்கள்” - Wisdom Village Publications Pvt Ltd. Gurugram, Haryana.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya