பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்பது 3 பெப்ரவரி 2020 முதல் 5 திசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மா டோமே சேர கும் அஷெனே' என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் 'ரித்வா' என்பவர் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் ரஷ்மிதா ரோஜா, கிரண், ஸ்ரீதேவி, ராஜ்குமார், நீபாபோன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பிரவீன் பென்னட் என்பவர் தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.[2] நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇது ஒரு குடும்பம் சார்ந்த தொடர். இந்த தொடரில் வம்சம் தொடரில் நடித்த ஜெயஸ்ரீயின் மகள் முதல் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.[4] இவர் சூப்பர் மாம் 1.0 என்ற ஜீ தமிழ் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இவருடன் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்த கிரண் நடிக்கின்றார். கன்னட தொலைக்காட்சி நடிகை ரஷ்மிதா ரோஜா என்பவர் மீரா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்குமார் மற்றும் ஸ்ருதி ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia