வம்சம் என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் விஷன் டைம் என்ற நிறுவனம் தயாரிப்பில் 10 சூன் 2013 முதல் 18 நவம்பர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி 1338 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1][2]
தனது தாய் தந்தையால் பிரிந்த உறவுகளை ஒன்று சேர்ப்பதற்காக மாமன் (அண்ணாச்சி) வீட்டில் வீட்டுவேலை செய்யும் பெண்ணாக போகும் சக்தி (ரம்யா கிருஷ்ணன்) எதிர்கொள்ளும் நிகழ்வுகளாக இத் தொடர் அமைந்துள்ளது.
நடிகர்கள்
முதன்மைக் கதாபாத்திரம்
ரம்யா கிருஷ்ணன் - அர்ச்சனா பொன்னுரங்கம் /சக்தி சரத் நாராயணன் (இரட்டை வேடங்கள்)
சந்தியா - பூமிகா மதன்/ தேவிகா
சாய் கிரண் - பொன்னுரங்கம்
பரத் கல்யாண் - சரத் நாராயணன்
சக்தி சரவணன் - மதன் குமாரசாமி/சுதன் (இரட்டை வேடங்கள்)
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு
மிகக் குறைந்த மதிப்பீடுகள்
மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2013
9.9%
16.2%
2014
9.2%
12.6%
2015
8.5%
11.7%
2016
8.5%
12.9%
2017
9.2%
14.2%
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த சகோதரி, சிறந்த தாய், சிறந்த துணைக்கதாபாத்திரம் போன்ற பல விருதுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு சில விருதுகளையும் வென்றுள்ளது.