பொம்மையார்பாளையம் ஊராட்சி (Bommiyarpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6664 ஆகும். இவர்களில் பெண்கள் 3306 பேரும் ஆண்கள் 3358 பேரும் உள்ளனர்.
பாசவதைப் பரணி
சிவஞான தேசிகர் என்னும் துறவி இவ்வூரில் வாழ்ந்துவந்தார். பாசவதைப் பரணி என்னும் நூல் இவர்மீது பாடப்பபட்டுள்ளது. இவரை அந்த நூலின் காப்பு வெண்பா பொம்மைச் சிவஞான தேசிகன் என்று குறிப்பிடுகிறது. பொம்மை என்பதற்குக் குறிப்பு தரும் உ. வே. சா. பொம்மை என்பது பொம்மைய பாளையம். இது விழுப்புரம் தாலுகாவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். [7]