பொம்மை நாயகி
பொம்மை நாயகி (Pommai Nāyaki) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி சமூக நாடகத் திரைப்படம் . இப்படம் சான் இயக்கத்திலும் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைப்பிலும் அதிசயராஜ் ஆர் ஒளிப்பதிவிலும் செல்வா ஆர்கே படத்தொகுப்பிலும் வெளியிடப்பட்டது.[1][2] கதைதேநீர்க்கடையில் வேலை செய்யும் வேலு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது ஒன்பது அகவை மகளுக்கு நீதி கேட்டுப் போராடுவதே இத்திரைப்படத்தின் கதை.[3] நடிகர்கள்
பட உருவாக்கம்இப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டி 2022 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது [4] இப்படத்தின் படப்பிடிப்பு 2021 நவம்பர் 24 அன்று நிறைவடைந்தது [5] யோகி பாபு தனது நடிப்புப் பகுதிகளுக்கு 2022 பெப்ரவரி 1 அன்று பின்னணிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.[6][7] ஒலிப்பதிவு
பாடல்களுக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார்,[8] ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. "அடியே ராசாத்தி" என்ற தலைப்பில் முதல் பாடல் 2023 சனவரி 6 அன்று வெளியிடப்பட்டது. அப்பாடல் மெல்லிசைப் பாடல் கபிலன் எழுதி, சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து, சத்யபிரகாஷ் பாடிய பாடல்.[9][10]
வெளியீடுபடம் 2023 பெப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[11][12][13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia