காலா
காலா (Kaala) (ஆங்கிலம்: Black)[1][2] என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும்[1][3]. இதை எழுதி இயக்குபவர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ்.[4] இந்தத் திரைப்படத்தில் ரசினிகாந்த் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[5][6] இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியானது. ஏப்ரல் 27, 2018 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகவும்[7], காவிரி ஆற்று நீருக்கான போராட்டம் ஆகிய காரணங்களினாலும் இந்தத் திரைப்படம் சூன் 7, 2018 அன்று வெளியானது.[8][9]சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமை பெற்றது.[10] நடிகர்கள்
தயாரிப்புவளர்ச்சிரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தின் பிற்பகுதியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இதே கூட்டணியைக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார்.[15][16] இப்படம் கபாலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அறிவியல் புனைகதைத் திரைப்படமான 2.0 (2018) படப்பிடிப்புப் பணிகள் முடிந்தபின், 2017 ஆம் ஆண்டின் நடுவில் பணிகள் துவங்கும் என்று தனுஷ் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் படத்தின் தயாரிப்பாளருக்கு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனான, சுந்தர் ஷெக்கர் மிஸ்ரா ஒரு கடிதத்தை எழுதினார். அதில் இப்படத்தின் கதையில் தனது தந்தையை எதிர்மறையான முறையில் சித்தரிக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.[17] இதற்கு பதிலளித்த பா. ரஞ்சித் இந்த படத்திற்கும் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்தார். மேலும் இந்த திரைப்படம் கற்பனை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து, சிறுவனாக இருந்த ரஜினி தப்பி மும்பை தாராவி சேரிக்கு வந்து சேர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்ட கதை எனவும் விளக்கினார்.[18] படத்தின் பெயரான காலா என்பதை, 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவித்து, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் திரைப்படத்தின் முதல் சுவரோட்டியை வெளியிட்டனர்.[19] படப்பிடிப்புஇந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 2017 மே 28 இல் துவங்கியது. இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.[20][21][22][23][24] பாடல்கள்
வழக்குகாலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் திரவியம் நாடார் மற்றும் நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. படக்குழு அவற்றை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை தேவை" என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.[25] கருநாடகாவில் தடைரஜினி காவிரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கருநாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘காலா’ திரைப்படத்திற்கு தடை விதித்தது. இதனால் கருநாடக மாநிலத்தில் 'காலா' திரைப்படம் வெளியீடுவது கேள்விக்குறியாக உள்ளது.[26] பின் கருநாடகத்தில் திரைப்படத்தை கட்டாயமாக வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும், வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சூலை 5, 2018 இல் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.[27] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia