பொலோனியம் இருகுளோரைடு
பொலோனியம் இருகுளோரைடு (Polonium dichloride) PoCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியமும் குளோரினும் சேர்ந்து இந்த உலோகப்போலி சேர்மம் உருவாகிறது. இது ஓர் அயன உப்பாகும். பொலோனியம் டைகுளோரைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது. கட்டமைப்புபொலோனியம் இருகுளோரைடு P222, Pmm2 அல்லது Pmmm என்ற இடக்குழுவில் ஒரு நேர்ச்சாய்சதுர அலகு செல்லுடன் படிகமாக்கப்படுவதாகத் தெரிகிறது, இருப்பினும் இது ஒரு போலி-செல்லாகவும் இருக்கலாம். மாற்றாக, உண்மையான இடக்குழு ஒற்றைச் சாய்வு அல்லது முச்சாய்வு கொண்டதாக இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல் கோணங்கள் 90 பாகை அளவுக்கு அருகில் இருக்கும்.[2] இடக்குழுவை P222 எனக் கொண்டால், அந்த அமைப்பு Po இன் சிதைந்த கனசதுர ஒருங்கிணைப்பு {PoCl8} ஆகவும், Cl இன் சிதைந்த சதுர தள ஒருங்கிணைப்பு {ClPo4} ஆகவும் காட்டுகிறது. தயாரிப்புபொலோனியம் உலோகத்தை ஆலசனேற்றம் செய்வதன் மூலமாகவோ அல்லது பொலோனியம் நாற்குளோரைடை (PoCl4) ஆலசன் நீக்கம் செய்வதன் மூலமாகவோ பொலோனியம் இருகுளோரைடைப் பெறலாம்.[1] 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலம் பொலோனியம் நாற்குளோரைடை ஆலசன் நீக்கம் செய்ய இயலும். கந்தக டை ஆக்சைடு மூலம் குளிர்ச்சியான, சற்று ஈரப்பதமான PoCl4 சேர்மத்தை குறைத்தும் ஆலசன் நீக்கம் செய்யலாம். 150 °செல்சியசு வெப்பநிலையில் கார்பன் மோனாக்சைடு அல்லது ஐதரசன் சல்பைடு வாயுப் பாய்ச்சலில் PoCl4 சேர்மத்தை வெப்பப்படுத்தியும் ஆலசன் நீக்கம் செய்யலாம். [2] வினைகள்பொலோனியம் இருகுளோரைடு நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து இளஞ்சிவப்பு நிறக் கரைசலைத் தருகிறது. இது Po(IV) ஆக தன் ஆக்சிசனேற்றம் அடைகிறது. ஐதரசன் பெராக்சைடு அல்லது குளோரின் நீரால் பொலோனியம் இருகுளோரைடு விரைவாக ஆக்சிசனேற்றப்படுகிறது. இளஞ்சிவப்பு கரைசலில் பொட்டாசியம் ஐதராக்சைடைச் சேர்ப்பதால் அடர் பழுப்பு நிற வீழ்படிவு உருவாகிறது. இது நீரேற்றப்பட்ட PoO அல்லது Po(OH)2 ஆக இருக்கலாம். இது Po(IV) ஆக விரைவாக ஆக்சிசனேற்றப்படுகிறது. நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன், PoCl2 ஓர் அடர் சிவப்பு கரைசலை உருவாக்குகிறது, அதைத் தொடர்ந்து அறியப்படாத கலவையின் செதில்களாக வெள்ளை வீழ்படிவு ஏற்படுகிறது.[2] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia