பொலோனியம் மூவாக்சைடு

{{Chembox | SystematicName =

பொலோனியம் மூவாக்சைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் மூவாக்சைடு
இனங்காட்டிகள்
12143-28-1 Y
பண்புகள்
PoO3
வாய்ப்பாட்டு எடை 256.98 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொலோனியம் மூவாக்சைடு (Polonium trioxide) என்பது PoO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம்(VI) ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பொலோனியத்தின் அறியப்பட்டுள்ள மூன்று ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். பொலோனியம் மோனாக்சைடு (PoO) பொலோனியம் டையாக்சைடு (PoO2) என்பன மற்ற இரண்டு ஆக்சைடுகளாகும். சால்கோசன்களிடை சேர்மமான இது சுவடு அளவுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[1][2]

தயாரிப்பு

அமிலக் கரைசல்களிலிருந்து பொலோனியம் நேர்மின் முனையில் படியும் போது, ​​பொலோனியம் மூவாக்சைடு சிறிய அளவில் உருவாகிறது. இதற்கு எந்த சோதனை ஆதாரமும் இல்லை என்றாலும், இந்தப் படிவு ஐதரசன் பெராக்சைடில் கரைகிறது என்பதால் அதில் அதிக ஆக்சிசனேற்ற நிலையில் பொலோனியம் இருப்பதைக் குறிக்கிறது. பொலோனியம் டையாக்சைடுடன் குரோமியம் மூவாக்சைடை காற்றில் ஒன்றாகச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் பொலோனியம் மூவாக்சைடை தயாரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொலோனியம்(VI) சேர்மங்களைத் தயாரிப்பதில் சிரமம்

Po(IV) நிலைக்கு அப்பால் பொலோனியத்தை ஆக்சிசனேற்றம் செய்வது மிகவும் கடினமாகும். எடுத்துக்காட்டாக, பொலோனியத்தின் ஒரே எக்சா ஆலைடு சேர்மம் பொலோனியம் அறுபுளோரைடு மட்டுமே (PoF6) ஆகும். மேலும் புளோரின் ஏற்கனவே மிகவும் மின்னெதிர் தன்மை கொண்ட தனிமமாகும்.[2] ஒரு காலத்தில் பொலோனியம் ஆறயோடைடு ஆவி நிலையில் உருவானதாகக் கூறப்பட்டாலும், அது உடனடியாக சிதைந்தது.[3] இருப்பினும், Po(IV) சேர்மங்களை நேரடி ஆக்சிசனேற்றம் மூலம் பொலோனியம் மூவாக்சைடு மற்றும் பொலோனேட்டுகளைப் (சல்பேட்டு, செலீனேட்டு மற்றும் தெலூரேட்டுக்கு ஒப்பான PoO2−
4
எதிர்மி அயனிகளைக் கொண்டது) பெறுவதில் உள்ள சிரமம், பொலோனியத்தின் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஐசோடோப்பான பொலோனியம்-210 வலுவான கதிரியக்கத்தன்மை கொண்டது என்பதன் காரணமாக இருக்கலாம். கியூரியத்துடன் இதேபோன்ற ஆய்வுகள், நீண்ட ஆயுள் கொண்ட ஐசோடோப்புகளுடன் அதிக ஆக்சிசினேற்ற நிலைகளை அடைவது எளிது என்பதைக் காட்டுகிறது; இதனால், நீண்ட ஆயுள் கொண்ட பொலோனியம்-208 அல்லது பொலோனியம்-209 ஐசோடோப்பைப் பயன்படுத்தி Po(VI) (குறிப்பாக பொலோனியம் மூவாக்சைடு) பெறுவது எளிதாக இருக்கும்.[2] மற்ற உயர் ஆக்சிசனேற்ற நிலைகளைப் போலவே, PoF2−
8
அல்லது PoO6−
6
போன்ற எதிர்மின் அயனிகளில் Po(VI) மேலும் நிலைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, ISBN 0-12-352651-5
  2. 2.0 2.1 2.2 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. pp. 197–230. ISBN 9780120236046. Retrieved June 14, 2012.
  3. 3.0 3.1 Thayer, John S. (2010). "Relativistic Effects and the Chemistry of the Heavier Main Group Elements". Relativistic Methods for Chemists. Challenges and Advances in Computational Chemistry and Physics. Vol. 10. p. 78. doi:10.1007/978-1-4020-9975-5_2. ISBN 978-1-4020-9974-8.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya