போசியா பாத்திமா
போசியா பாத்திமா (Fowzia Fathima, பிறப்பு 24 சனவரி 1972) என்பவர் ஓர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர, இயக்குநர் ஆவார். மௌத்ர், மை ஃப்ரெண்ட் 2012, குலுமால்: தி எஸ்கேப் 2009, உயிர் 2006 போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக ஃபோசியா அறியப்படுகிறார். இவர் ஊடக தொழில்நுட்பங்களில் ஒளிப்பதிவுக்கான பயிற்சியாளராக உள்ளார், இவர் இந்தியாவை தளமாகக் கொண்ட சமகால திரைப்படத் தயாரிப்பு மற்றும் கற்பித்தலில் பரந்த அனுபவம் உள்ளவர்.[1] இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான ஃபோசியா பாத்திமா,[2] சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பேராசிரியராகவும், ஒளிப்பதிவுத் துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார் மேலும் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இன்பெக்ஷன் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.[3] கல்விபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒளிப்பதிவுவில் பட்டய படிப்பு, 1996-1998. முதல் வகுப்பு, "ஏ" தரத்தில் தேர்ச்சி. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கலைத் திறனாயவில் முதுகலைப் பட்டம், 1993-1995. சென்னை இசுடெல்லா மேரிக் கல்லூரியில் இளங்கலை பட்டம் (கலை வரலாறு, ஓவியம்), 1989-1992. தொழில்ஒளிப்பதிவாளராகபி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை குழுவை மட்டுமே கொண்டு ரேவதி இயக்கிய மித்ர், மை பிரெண்ட் திரைப்படத்தில் சுயாதீன ஒளிப்பதிவாளராக இவர் அறிமுகமானார்.[4] ஃபோசியா மலையாள சினிமாவில் முதல் சுயாதீனமான பெண் ஒளிப்பதிவாளராகவும், இந்திய மகளிர் ஒளிப்பதிவாளர்களின் கூட்டமைப்பிக்கு பின்னால் உள்ள சக்தியாகவும் உள்ளார்.[5][6][7][8][9][10][11][12] திரைப்படவியல்ஒளிப்பதிவு இயக்குநராக
இயக்கம் & ஒளிப்பதிவு
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia