வி. கே. பிரகாசு
வி. கே. பிரகாஷ் (பிறப்பு: அக்டோபர் 12, 1960) ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகருமாவார். இவர் திரைப்படங்கள், இசைக் காணொளிகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்குகிறார். மேலும் மலையாள மொழியில் முக்கியமாக பணியாற்றுகிறார். ஆனால் தெலுங்கு, மராத்தி, கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார்.[2] இவரது அறிமுக படமான புனரதிவாசம் (2000) மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றது .[3] இவரது நிர்ணயகம் (2015) திரைப்படம் பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[4] ஆரம்ப கால வாழ்க்கைபாலகாட்டில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் உள்ள இவர், டிரெண்ட்ஸ் ஆட்ஃபில்ம் மேக்கர்ஸ் என்ற பெயரில் தனது சொந்த விளம்பர திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். விளம்பரத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு திருச்சூர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் படித்தார்.[5] சொந்த வாழ்க்கைஇவர் சஜிதா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு காவ்யா என்ற மகள் உள்ளார்.[6] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia