போச்சம்பள்ளி, தமிழ்நாடு
போச்சம்பள்ளி (Pochampalli, Tamil Nadu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்[2]. இது போச்சம்பள்ளி வட்டத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. போச்சம்பள்ளியானது மாவட்டத் தலைமையகமான கிருட்டிணகிரியிலிருந்து தெற்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 256 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மா.நெடுஞ்சாலை-60 இல் அமைந்துள்ளது. போச்சம்பள்ளி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. போச்சம்பள்ளியின் மேற்கில் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியங்களும், வடக்கே பருகூர் ஊராட்சி ஒன்றியமும், கிழக்கே கந்திலி மற்றும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியங்களாலும் சூழப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள நகரங்களாக திருப்பத்தூர், தருமபுரி, கிருட்டிணகிரி ஆகியவை உள்ளன. அருகிலுள்ள தொடருந்து நிலையமாக கல்லாவி மற்றும் சாமல்பட்டியும், முக்கிய சந்திப்பாக ஜோலார்பேட்டையும் உள்ளது. அருகிலுள்ள உள்நாட்டு வானூர்தி நிலையம் சேலம், அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரில் உள்ளது. போச்சம்பள்ளியில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாரச்சந்தைகளில் ஒன்று ஞாயிற்றுக்கிழமைகளில் இது கூடுகிறது. இந்த நகரம் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் சிப்காட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பேர்வே எண்டர்பிரைசஸ் கம்பெனி லிமிடெட் [3] மற்றும் ஓலா [4] மின் இருசக்கர ஊர்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த ஊரில் அரசு மகளிர் மற்றும் ஆடவர் பள்ளிகள் உள்ளன. பெயர் வரலாறுபோச்சம்பள்ளியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆடுகளத்தில் கல்வெட்டு ஒன்று கட்டுபிடிக்கபட்டது. அது போசள மன்னன் சோமீசுரதேவனின் ஆட்சிக் காலத்தை சேர்ந்ததாகும். அக்கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் போச்சையன் பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போச்சையன்பள்ளியில் உள்ள ஐகாரம் கெட்டு, அன் நீங்கி 'அம்' பெற்று போச்சம்பள்ளி என்று பிற்காலத்தில் மாறியுள்ளது.[5] போச்சம்பள்ளி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. நிலவியல்கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்கிழக்கில் போச்சம்பள்ளி உள்ளது. இதன் வடக்கே பருகூர் நகரமும், திருப்பத்தூர் மாவட்டமும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் ஊத்தங்கரை வட்டமும், தெற்கிலும் தென்மேற்கிலும் தர்மபுரி மாவட்டமும், வடமேற்கில் கிருஷ்ணகிரி வட்டமும் எல்லைகளாக உள்ளன. இதன் எல்லைகளில் ஒன்றாக தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்துக்கு இடையில் தென்பெண்ணை ஆறு உள்ளது. மக்கள்தொகையியல்2011 ஆம் ஆண்டில், மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் இந்த வட்டமும் ஒன்றாக இருந்தது. அப்போது இன்றைய பர்கூர் வட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த வட்டம் இருந்த போது, இது 182,119 மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது. பாலின விகிதமானது 1,000 ஆண்களுக்கு 967 பெண்கள் என்று இருந்தது. இந்த வட்டம் 65.3% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டிருந்தது. 6 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அதற்குக் குறைவான வயது உடையவர்களில் 10,018 ஆண்களும், 8,759 பெண்களும் இருந்தனர். இவர்கள் மக்கள் தொகையில் சுமார் 10.3% இருந்தனர். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia