கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம் (Krishnagiri district) என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருட்டிணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30-ஆவது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டம் மலைகள் நிறைந்து காணப்படுகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. வரலாறு![]() கிருட்டிணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருட்டிணகிரி, மற்றும் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது. இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருட்டிணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாசா மலை. இந்த கோட்டை விசயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருட்டிணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், பிற்காலத்தில் செகதேவிராயர், செகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருட்டிணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஐதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஐதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன. " சிரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மகால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராசு மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருட்டிணகிரி மாறியது[2].
மாவட்ட வருவாய் நிர்வாகம்இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[3] வருவாய் கோட்டங்கள்உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்இம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும்[4], 10 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[6] பேருராட்சிகள்
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.[8] இம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது. அரசியல்மக்களவைத் தொகுதிசட்டமன்ற தொகுதிகள்அமைவிடம்கிருட்டிணகிரி மாவட்டமானது கிழக்கே திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காசுமீர் வரை தேசிய நெடுஞ்சாலை 44) மற்றும் கிருட்டிணகிரி - வாலாசா தேசிய நெடுஞ்சாலை 46, கிருட்டிணகிரி - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், ஜோலார் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது. பொருளாதாரம்இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கிருட்டிணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எசு, பிரிமியர் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து உரோசா மலர் சாகுபடி செய்வதில் ஓசூர் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது. போக்குவரத்துசாலைஇந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது. தேசிய நெடுஞ்சாலை: ![]()
மாநில நெடுஞ்சாலைகள்:
தொடருந்துசேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடருந்து நிலையம் உள்ளது. கோவை - ஈரோடு - சோலார்பேட்டை அகல இருப்புப் பாதையானது சாமல்பட்டி வழியாக செல்கிறது. கிருட்டிணகிரி மாவட்டத்தின் விவரங்கள்புவியியல் அமைப்புஇது 11 ° 12 'N மற்றும் 12 ° 49' N அட்சரேகை, 77 ° 27 'E முதல் 78 ° 38' E தீர்க்கரேகை வரை அமைந்துள்ளது. தட்பவெப்பநிலை(1) சமவெளியில்: அ. அதிகபட்சம் - 37.20 C ஆ. குறைந்தபட்சம் - 16.40 C மழையளவு (மி.மீட்டரில்)(1) சாதாரணமாக: அ. தென்மேற்கு பருவமழை - 399.0 ஆ. வடகிழக்கு பருவமழை - 289.4 (2) உண்மையாக: அ. தென்மேற்கு பருவமழை - 359.1 ஆ. வடகிழக்கு பருவமழை - 442.5 விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (எக்டேரில்) - 2,13, 748 ஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு - 1,72,884 இ. ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடப்பட்ட பரப்பு - 40,86 முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு
விவசாய நிலங்கள்அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) - 281392 ஆ. பரப்பு எக்டேரில் - 2,25,410 இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (எக்டேரில்) - 0.80 முக்கிய உணவுப்பயிர்கள்நெல், கேழ்வரகு, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைக்கோசு, வாழை, தக்காளி, நிலக்கடலை பிற பயிர்கள்மலர் சாகுபடி (உரோசா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி), பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டைக்கோசு, முள்ளங்கி, வாழை, பீன்ஸனசு, தக்காளி, கத்தாி) நீர்ப்பாசனம்அ. நிகர பாசனப்பகுதிகள் (எக்டேரில்) (i) அரசு கால்வாய்கள் - 858 (ii) அரசுடமையல்லாத கால்வாய்கள் -- (iii) ஏரிகள் - 8192 (iv) ஆழ்துழை கிணறுகள் - 17674 (v) இதர கிணறுகள் - 41452 மொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் - 57268 எக்டேர் ஆ. மொத்த பரப்பு (எக்டேரில்) - 68301 இ. ஆறுகளின் பெயர் - பெண்ணையாறு, பாம்பாறு ஈ. ஏரியின் பெயர் - பாரூரா பெரிய ஏரி கால்நடை வளர்ப்புஅ. கால்நடை நிறுவனங்கள் (i) கால்நடை மருத்துவமனைகள் - 2 (ii) கால்நடை மருந்தகங்கள் - 67 (iii) மருத்துவர் மையங்கள் - 1 (iஎ) துணை மையங்கள் - 22 (எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் - 10 காடுகள்அ. காடுகள் பரப்பு (எக்டேரில்) 1. காப்பு காடுகள் - 141622.2663 2. காப்பு நிலங்கள் - 8345.37 3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310 நீர்தேக்கங்கள்![]()
இதன் மூலம் 18,965 எக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)(i) நவீன மருத்துவம்: அ. மருத்துவமனைகள் - 6 ஆ. மருந்தகங்கள் - 4 இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 56 ஈ. சுகாதார துணை நிலையங்கள் - 239 உ. இதர மருத்துவ நிறுவனங்கள் - 41 (ii) இந்திய மருத்துவம்: அ. மருத்துவமனைகள் -- ஆ. மருந்தகங்கள் -- இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்) - 23 ஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் -- உ. சித்தா மருத்துவர்கள் - 21 ஊ. செவிலியர்கள் -- எ. சித்தா -- (iii) ஓமியோபதி:: அ. மருத்துவமனைகள் -- ஆ. மருந்தகங்கள் -- இ. ஆரம்ப சுகதார மையங்கள் - 2 ஈ. மருத்துவர்கள் - 2 உ. செவிலியர்கள் -- கல்வி
தகவல் தொடர்பு
கூட்டுறவு நிறுவனங்கள்
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைகாவல்படை 23
தீயணைப்பு துறை - 7 நிலையங்கள். அவை:
விவசாயம்மாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 எக்டேரிலும், கேழ்வரகு 48,944 எக்டேரிலும், பயிறுவகைகள் 48,749 எக்டேரிலும், கரும்பு 4,078 எக்டேரிலும், மாங்கனி 30,017 எக்டேரிலும், தேங்காய் 13,192 எக்டேரிலும், புளி 1,362 எக்டேரிலும் பயிரிடப்படுகின்றன. சுற்றுலாத் தலங்கள்![]() கிருட்டிணகிரி அணைகிருட்டிணகிரி அணை கிருட்டிணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் கிருட்டிணகிரி, தருமபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தளிதளி கருநாடக மாநில எல்லையில், ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது. பெட்டமுகிளாலம்இது கிருஷ்ணகிரியின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயர்ந்த மலை சிகரம் ஆகும். இந்த மலையில் தான் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அதிகளவில் காட்டு யானைகள் உள்ளது. இங்குள்ள சாமி ஏரி யானைகளின் தாகம் போக்கும் நீர் நிலை ஆகும். மாரண்டஹள்ளி சாலையில் உள்ள அண்ணாநகர் காட்சி முனையில் இருந்து பார்த்தால் மாரண்டஹள்ளி மற்றும் இராயக்கோட்டை நகரங்கள் சிறப்பாக தெரியும். சந்திர சூடேசுவரர் திருக்கோயில்சந்திர சூடேசுவரர் திருக்கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு பழமையான கோயிலாகும். இக்கோயில் ஒசூரின் கிழக்கே உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும். ![]() . இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது வழக்கமாகும். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia