போர்ட் எலிசபெத்
போர்ட் எலிசபெத் (Port Elizabeth, தமிழ்:எலிசபெத் துறைமுகம்) அல்லது தி பே (The Bay, விரிகுடா)[2] ( ஆபிரிக்கான மொழி: Die Baai) தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்; இது கிழக்கு கேப் மாகாணத்தில், கேப் டவுனுக்கு கிழக்கே 770 கி.மீ. (478 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் சிலநேரங்களில் PE என தனது ஆங்கில முதலெழுத்துக்களாலும் "நட்பான நகரம்" அல்லது "காற்றடிக்கும் நகரம்" எனவும் குறிப்பிடப்படுகின்றது. அல்கோவா விரிகுடாவில் 16 கி.மீ.க்கு பரந்துள்ள இந்த நகரம் தென்னாப்பிரிக்காவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். கேப் டவுனுக்கிற்கும் தெற்கேயுள்ள போர்ட் எலிசபெத் ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள பெரிய நகரமாக விளங்குகின்றது. போர்ட் எலிசபெத் 1820இல் கேப் குடியேற்றத்தை சோசா மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு பிரித்தானிய குடியேற்றமாக நிறுவப்பட்டது. இது இப்போது நெல்சன் மண்டேலா விரிகுடா பெருநகர நகராட்சியின் அங்கமாக உள்ளது; பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 1.3 மில்லியன் ஆகும். பிப்ரவரி 2021 முதல், வால்மர் நகரத்தின் ஹோசா பெயரிலிருந்து கிகெபெர்ஹாவின் பெயர், தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் போர்ட் எலிசபெத் நகரத்தை நியமிக்க முறைப்படுத்தப்பட்டுள்ளது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Port Elizabeth என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia