போர்த்துகலின் மூன்றாம் யோவான்
மூன்றாம் யோவான் (John III, ஜான் III, போர்த்துகேயம்: யோவோ III ; 7 சூன் 1502 – 11 சூன் 1557) போர்த்துகல் மற்றும் அல்கார்வெசு இராச்சியத்தின் மன்னராக திசம்பர் 13, 1521 முதல் சூன் 11,1557 வரை அரசு புரிந்தவர். மன்னர் முதலாம் மானுவலுக்கும் மாரியாவிற்கும் மகனாகப் பிறந்தவர்.தமது தந்தைக்குப் பிறகு தமது பத்தொன்பதாவது அகவையில் 1521இல் முடி சூடினார். இவரது ஆட்சிக்காலத்தில் போர்த்துகல் ஆசியாவிலும் புதிய உலகிலும் புதிய உடமைகளை நிலைநாட்டினர். பிரேசில் குடியேற்றம் மூலமாக கையகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் (கோவா (மாநிலம்) போன்று) போர்த்துகலின் இருப்பை வலுப்படுத்தும் இவரது கொள்கையால் போர்த்துகல்லுக்கு மலுக்கு தீவுகளிலிருந்து கிராம்பு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களின் வணிகத்தில் ஏகபோகம் எட்டியது.[1] இதனால் இவர் "மளிகை மன்னர்" என்று அழைக்கப்பட்டார். 1557இல் இவரது மறைவின்போது போர்த்துக்கேய பேரரசு ஏறத்தாழ 1 பில்லியன் ஏக்கர்களுக்கு விரிவடைந்திருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சீனாவுடனும்( மிங் அரசமரபு) சப்பானுடனும் (முரோமாச்சி காலம்) தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பியர்களாக போர்த்துக்கேயர் விளங்கினர். இந்திய வணிகத்திற்கும் பிரேசில் முதலீட்டிற்கும் முன்னுரிமை கொடுத்ததால் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த முஸ்லிம் பகுதிகளை கவனிக்காது இருந்தார்.[2] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia