போர்பந்தர் இராச்சியம்
![]() ![]() ![]() போர்பந்தர் இராச்சியம் (Porbandar State) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் போர்பந்தர் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில், அரபுக் கடலை ஒட்டி அமைந்திருந்தது. இது பிரித்தானிய கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. போர்பந்தர் இராச்சியத்தின் பரப்பளவு 1,663 சதுர கிலோமீட்டர்கள் (642 sq mi) ஆகும். இது 1921-இல் 106 கிராமங்களையும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய் 21 இலட்சம் கொண்டிருந்தது. வரலாறு1193-ஆம் ஆண்டில் போர்பந்தர் இராச்சியமானது இராஜபுத்திர குலத்தின் ஜேத்வா வம்சத்தினரால் நிறுவப்பட்டது. 1307-இல் இதன் பெயர் ரண்பூர் இராச்சியம் என மாற்றப்பட்டது. மீண்டும் 1574-இல் இதற்கு மீண்டும் சாயா இராச்சியம் எனப்பெயரிடப்பட்டது. இறுதியாக 1785-ஆம் ஆண்டில் மீண்டும் போர்பந்தர் இராச்சியம் எனப்பெயரிடப்பட்டது. 5 டிசம்பர் 1809 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற போர்பந்தர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இந்த இராச்சியம் 1886 மற்றும் 15 செப்டம்பர் 1900-ஆண்டுகளில் பம்பாய் மாகாணத்தின் நிர்வாகத்தில், கத்தியவார் முகமையின் கீழ் சென்றது. 1888-ஆம் ஆண்டில் போர்பந்தர் இராச்சியத்தின் குற்றகலப் பாதை கொண்ட இரயில்வே இருப்புப்பாதை தொடங்கப்பட்டது.[1] இந்திய விடுதலைக்குப் பின்னர் 15-02-1948 அன்று இந்த இராச்சியத்தை சௌராஷ்டிர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் சித்தப்பா துளசிதாஸ் காந்தி, போர்பந்தர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றியவர்.[2][3] ஆட்சியாளர்கள்போர்பந்தர் இராச்சியத்தை ஆண்ட இராஜபுத்திர குலத்தின் ஜேத்வா வம்சத்தினர் ஆவார்.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia