போர்பந்தர் மாவட்டம்![]() ![]() கீதா ஆலயம் (மந்திர்), போர்பந்தர் ![]() போர்பந்தர் மாவட்டம் (Porbandar district) (குசராத்தி: પોરબંદર જિલ્લો) மேற்கு இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் சௌராஷ்டிர தீபகற்பத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகம் போர்பந்தர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,298 km² ஆகும். மக்கட்தொகை 5,86,062 . 48.77% மக்கள் நகர்புறத்தில் வாழ்கின்றனர்.[1] வடக்கில் ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம், கிழக்கில் ஜூனாகாத் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் மாவட்டம், மேற்கிலும் தெற்கிலும் அரபுக்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது போர்பந்தர் மாவட்டம் வரலாறுமோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த மாவட்டம் போர்பந்தர். கிருஷ்ணரின் பள்ளிப்பருவ நண்பர் குசேலர் பிறந்த மாவட்டம் போர்பந்தர் என மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்போர்பந்தர் மாவட்டம் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
வேளாண்மைபருத்தி, நிலக்கடலை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் முதலியன பயிரிடப்படுகின்றன. மக்கள் வகைப்பாடு2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கட்தொகை 586,062ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 255ஆக உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்ற அளவில் உள்ளது. கல்வி அறிவு 76.63%ஆக உள்ளது. போக்குவரத்து வசதிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia